»   »  பைசாவிற்கு கிடைக்கும் மரியாதை மனிதனுக்கு கிடைப்பதில்லை- 'பசங்க' ஸ்ரீராம்

பைசாவிற்கு கிடைக்கும் மரியாதை மனிதனுக்கு கிடைப்பதில்லை- 'பசங்க' ஸ்ரீராம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பணத்திற்கு கிடைக்கும் மரியாதை மனிதர்களுக்கு கிடைப்பதில்லை என்று 'பசங்க' ஸ்ரீராம் தெரிவித்திருக்கிறார்.

'பசங்க', 'கோலி சோடா', 'கமர்கட்டு', 'பாபநாசம்' போன்ற படங்களில் நடித்த ஸ்ரீராம் தனி ஹீரோவாக நடித்திருக்கும் படம் 'பைசா'. விஜய்யின் 'தமிழன்' படத்தை இயக்கிய அப்துல் மஜீத் பைசாவை இயக்கியிருக்கிறார்.

ஸ்ரீராமுக்கு ஜோடியாக ஆரா நடித்திருக்கும் இப்படம் குறித்து நடிகர் ஸ்ரீராம் '' 'கற்றது தமிழ்' தொடங்கி எல்லா படமும் தானாகவே அமையுது. இதுவரை எந்தப் படத்தையும் நான் தேடி போனதில்லை.

Pasanga Sriram Talks about his Upcoming Movie

அப்படி தானா அமைஞ்ச கதைதான் 'பைசா'. ஒரு வருடத்துக்கு முன்னால இந்தப் படத்தோட படப்பிடிப்பைத் தொடங்கினோம். ஜூலை 1 ம் தேதி படம் ரிலீசாகுது.

'பைசா' குப்பை பொறுக்குறவங்களைப் பத்தின கதை. இதுவரை இந்த மாதிரி கதைக்களத்துல யாரும் படம் பண்ணதில்லை. படத்துல நான் குப்பை பொறுக்குறவனா வர்றேன்.

அவங்களோட வாழ்க்கைல என்ன நடக்குது. அவங்க சாப்பிடுறப்ப என்ன செய்வாங்க இதைப்பத்தியெல்லாம் விளக்கமா சொல்லிருக்கோம். நாம குப்பைனு தூக்கிப்போடறதுதான் அவங்களோட வாழ்வாதாரமா இருக்கு.

Pasanga Sriram Talks about his Upcoming Movie

''பல பேரு பல தொழில்ல பணம் போட்டு வேஸ்டா போயிருக்காங்க ஆனா குப்பை பொறுக்குறவங்க வேஸ்டையே முதலீடா போட்டு பெரிய ஆளாயிருக்காங்க'' அப்படின்னு படத்தோட கதையை சொல்ற மாதிரி படத்துல டயலாக் ஒண்ணு வச்சுருக்கோம்.

சுருக்கமா சொல்லணும்னா பணமே வாழ்க்கையில்லை. பணம் இல்லாமலும் வாழ்க்கையில்லை இதுதான் 'பைசா' படத்தோட கதை. ஒரு அழகான காதல், எதிர்பாராத திருப்பங்கள்னு படம் சுவாரசியமா வந்திருக்கு'' என்றார்.

English summary
Pasanga fame Sriram share his Experience about Paisa.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil