டியூட் 2வது நாள் அதிகாரப்பூர்வ வசூல்.. பிரதீப் ரங்கநாதன் 2கே கிட்ஸ் சூப்பர் ஸ்டார்னு அறிவிச்சுடலாம்
சென்னை: இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் டியூட் படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்திருந்தார். சரத்குமார், ரோகிணி உள்ளிட்டோர் முக்கியமான ரோலை ஏற்றிருந்தனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 17ஆம் தேதி படமானது ரிலீஸானது. இந்நிலையில் இரண்டு நாட்களில் படம் செய்திருக்கும் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
ரவி மோகனை வைத்து கோமாளி படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் அடுத்த படத்திலேயே ஹீரோ அவதாரம் எடுத்தார். அதன்படி அவர் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் 2கே கிட்ஸ் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்று நூறு கோடி ரூபாய் வசூலை அள்ளியது. இதன் காரணமாக தற்போதைய தலைமுறையில் பிரதீப் ரங்கநாதன் முக்கியமான ஹீரோக்களில் ஒருவராக மாறினார். அப்படத்துக்கு பிறகு தனது கல்லூரி சீனியர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடித்த டிராகன் திரைப்படமும் மெகா பிளாக்பஸ்டர் ஆகி 100 கோடி ரூபாயை வசூலித்தது.
டியூட் படத்தில் நடித்த பிரதீப் ரங்கநாதன்: இரண்டு படங்களின் மெகா வெற்றிக்கு பிறகு கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் டியூட் படத்தில் நடித்திருக்கிறார் அவர். கீர்த்திஸ்வரன் இயக்குனர் சுதா கொங்கராவிடம் 7 வருடங்கள் உதவி இயக்குநராக இருந்தவர். படமானது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 17ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீஸ் ஆனது. ஏற்கனவே வெளியான இரண்டு படங்களும் மெகா ஹிட் என்பதால் இப்படத்தின் மீதும் பிரதீப் ரொம்பவே நம்பிக்கை வைத்திருந்தார்.

எப்படி இருக்கு டியூட் திரைப்படம்: அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இப்படத்தில் சென்சிடிவ் விஷயமான ஆணவக் கொலை விவகாரத்தை கையில் எடுத்திருந்தார். அதனை ரசிகர்களுக்கு பிடிக்கும்படியும், போர் அடிக்காதபடியும் கொடுத்திருந்தார். கமர்ஷியல் ரீதியாக இப்படி ஒரு மெசேஜை சொன்ன கீர்த்திக்கு பலரும் தங்களது பாராட்டினை தெரிவித்துவருகிறார்கள். கண்டிப்பாக இவருக்கு தமிழ் சினிமாவில் தனி இடம் இருக்கிறது என்ற கணிப்புகளும் வெளியாக தொடங்கியிருக்கின்றன.
2கே கிட்ஸ் மத்தியில் செல்வாக்கு: இது ஒரு பக்கம் இருக்க பிரதீப் ரங்கநாதனின் நடிப்பு படத்தில் கொண்டாடும்படியாகவே இருந்தது. அவர் திரையில் வரும்போதும், பல சீன்களில் அவரது நடிப்பை பார்த்தும் தியேட்டரில் குழுமியிருந்த ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இதன் மூலம் அவருக்கு என்று தனி மவுசு ஏறியிருப்பது உறுதியாகி இருக்கிறது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: டியூட் திரைப்படம் விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் முதல் நாளில் 22 கோடி ரூபாயை உலகம் முழுவதும் வசூலித்ததாக படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில் இரண்டாவது நாளான நேற்று படத்தின் வசூல் குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டிருக்கிறது.
2கே கிட்ஸ் சூப்பர் ஸ்டார்: அதன்படி உலகம் முழுவதும் 23 கோடி ரூபாய் வசூலித்து தற்போது 45 கோடி ரூபாய் கலெக்ட் செய்திருக்கிறது. படத்துக்கு தொடர்ந்து கூட்டம் கூடிவருவதால் விரைவில் 50 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்து நூறு கோடி ரூபாயையும் வசூலிக்கும் என்று பலரால் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி தீபாவளிக்கு வெளியான படங்களின் வசூல் ரேஸில் மற்ற படங்கள் தொட முடியாத ரேஞ்சுக்கு டியூட் சென்றுவிட்டதால் இனி அவர்தான் 2கே கிட்ஸ் சூப்பர் ஸ்டார் என்றும் சமூக வலைதளங்களில் குரல்கள் எழுந்திருக்கின்றன.


Click it and Unblock the Notifications











