twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தெலுங்கில் நடிக்க தடை: பிரகாஷ்ராஜ் கடும் எதிர்ப்பு

    By Shankar
    |

    ஹைதராபாத்: தெலுங்கில் நடிக்கத் தனக்கு தடை விதிக்கப்போவதாக நடிகர் அனுப்பியுள்ள கடிதத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் பிரகாஷ்ராஜ்.

    வில்லன், ஹீரோ, இயக்குநர், தயாரிப்பாளர் என பன் முகக் கலைஞனாகத் திகழ்பவர் நடிகர் பிரகாஷ்ராஜ். தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்து வரும் இவர் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள்.

    குறிப்பாக தெலுங்கில். இவர் தெலுங்கில் மகேஷ்பாபு நடிக்கும் 'ஆகடு' படத்துக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

    நீக்கம்

    நீக்கம்

    முதல் நாள் படப்பிடிப்பில் அப்படத்தின் இணை இயக்குனர் சூர்யாவுக்கும், பிரகாஷ் ராஜூவுக்கும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து பிரகாஷ்ராஜ் படத்தில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதில் சோனு சூட் இப்போது நடிக்கிறார்.

    புகார்

    புகார்

    பிரகாஷ்ராஜ் தகாத வார்த்தைகளில் தன்னை திட்டியதாக சூர்யா தெலுங்கு டைரக்டர் சங்கத்தில் புகார் செய்தார். இதையடுத்து இயக்குநர் சங்கம் பிரகாஷ்ராஜ் சினிமாவில் நடிக்க ஒரு வருடம் தடை விதிப்பதென்று முடிவு செய்தது. நடிகர் சங்கத்துக்கும் இதுகுறித்து கடிதம் எழுதி உள்ளது.

    நோட்டீஸ்

    நோட்டீஸ்

    நடிகர் சங்கத்தினர் பிரகாஷ்ராஜிடம் நாளை மறுநாள் (28-ந் தேதி) விசாரிக்க உள்ளனர். இதற்காக நேரில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

    பொய் புகார்

    பொய் புகார்

    இதுகுறித்து பிரகாஷ்ராஜ் ஹைதராபாத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், "ஆகடு' படப்பிடிப்பில் இணை இயக்குனரை நான் தகாத வார்த்தைகளால் திட்டவில்லை. எனக்கு எதிராக பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது. படத்தின் இயக்குனர் சீனு வைட்லாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது உண்மைதான். ஒருநாள் படப்பிடிப்புக்குச் சென்றேன். அதன் பிறகு எனக்கு பதில் வேறு நடிகரை ஒப்பந்தம் செய்தனர்.

    தடை நியாயமல்ல

    தடை நியாயமல்ல

    நடிகரை மாற்றுவது இயக்குனர் உரிமை. அதில் நான் தலையிடவில்லை. தற்போது குறிப்பிட்ட ஒருவர் தூண்டுதலில் இந்த புகார் அளிக்கப்பட்டு உள்ளது. நான் 20 ஆண்டுகள் சினிமாவில் இருக்கிறேன். நடிப்பதற்கு ஓராண்டு எனக்கு தடை விதிப்பது நியாயம் அல்ல.

    கல்லால் அடித்தாலும்...

    கல்லால் அடித்தாலும்...

    நடிகர் சங்கத்திடம் என் தரப்பு நியாயங்களை விளக்குவேன். என்னை கல்லால் அடித்தாலும் அந்த கல்லை கொண்டு வீடு கட்டுவேன். சினிமாவில் இருந்து விரட்ட நினைத்தாலும் மேலும் வளரத்தான் செய்வேன்," என்றார்.

    English summary
    Actor, director Prakash Raj opposed the proposed ban on him in Telugu cinema.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X