»   »  தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அல்லது மறுதேர்தலே சரியான தீர்வு: அரவிந்த்சாமி

தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அல்லது மறுதேர்தலே சரியான தீர்வு: அரவிந்த்சாமி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வர வேண்டும் அல்லது மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று நடிகர் அரவிந்த் சாமி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நிலவும் அசாதாரண அரசியல் சூழல் குறித்து தான் ஒட்டு மொத்த இந்தியாவே பேசிக் கொண்டிருக்கிறது. நாடே தமிழகத்தில் நடப்பவற்றை உன்னிப்பாக கவனித்து வருகிறது.

President rule or re-election seems the best option: Arvindswami

நடிகர் அரவிந்த்சாமியும் தமிழக அரசியல் நெருக்கடியை கவனித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார். இந்நிலையில் அவர் இன்று ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

எம்.எல்.ஏ.க்கள் ஒரு தரப்புக்கு சாதகமாக செயல்படுவது, தனிமைப்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அப்படி இருக்கும்போது நம்பிக்கை வாக்கெடுப்பு எப்படி சரியான தீர்வாக அமையும்? ஜனாதிபதி ஆட்சி அல்லது மறு தேர்தலே சரியான தீர்வு என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியல் சூழல் குறித்து பிறர் தெரிவிக்கும் கருத்துகள் மற்றும் செய்திகளையும் ரீட்வீட் செய்து வருகிறார் அரவிந்த்சாமி என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actor Arvind Swami tweeted that,' Allegations of MLAs being influenced,isolated,how can even the floor test be indicative?President's rule & re-election seems the best option.'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil