»   »  புலி படத்தில் ஒன்றல்ல இரண்டல்ல 3 விஜய்: இப்பவே பார்க்கணும் போல இருக்கா?

புலி படத்தில் ஒன்றல்ல இரண்டல்ல 3 விஜய்: இப்பவே பார்க்கணும் போல இருக்கா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: புலி படத்தல் இளைய தளபதி விஜய் 3 வித்தியாசமான கதாபாத்திரங்களில் வருகிறாராம்.

இளைய தளபதி விஜய் சிம்பு தேவன் இயக்கத்தில் புலி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மூலம் மீண்டும் விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார் ஹன்சிகா. மேலும் ஸ்ருதி ஹாஸன் முதன்முதலாக விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

படம் பற்றி அவ்வப்போது சுவாரஸ்யமான ததவல்கள் வெளியாகி வருகின்றது.

இரட்டை வேடம்

இரட்டை வேடம்

புலி படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் இரட்டை வேடத்தில் நடிக்கவில்லையாம்.

மூன்று வேடம்

மூன்று வேடம்

விஜய் முதன்முறையாக 3 வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கிறாராம்.

கமாண்டர்

கமாண்டர்

படத்தில் விஜய் கமாண்டர், கார்டூனிஸ்ட் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறாராம். மூன்றாவது கதாபாத்திரம் பற்றிய தகவல்கள் கசிந்துவிடாமல் ரகசியமாக வைத்துள்ளார்களாம்.

பெயர் மாறுமா?

பெயர் மாறுமா?

புலி என்ற பெயர் ராசியில்லை என்று விஜய்யின் ரசிகர்கள் இணையதளத்தில் தெரிவித்துள்ளனர். இதையடுத்து படத்தின் பெயர் மாற்றப்படுகிறது என்று கூறப்பட்டது. ஆனால் அது குறித்து எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.

English summary
The big news that's been coming in is that Ilayathalapathy Vijay will not be seen in two roles in his upcoming film Puli but will don three different roles according to reports.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil