»   »  எம்.ஜி.ஆர் படத்தின் கதை சொன்ன விஜய் … புலி ஆடியோ விழாவில் அசத்தல் பேச்சு

எம்.ஜி.ஆர் படத்தின் கதை சொன்ன விஜய் … புலி ஆடியோ விழாவில் அசத்தல் பேச்சு

Posted By:
Subscribe to Oneindia Tamil

புலி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், எம்.ஜி.ஆர் நடித்த பல்லாண்டு வாழ்க திரைப்படத்தின் கதையை சொன்னதோடு பொறுமையாகவும் தெளிவாகவும் பேசி ரசிகர்களின் அப்ளாஸ் அள்ளினார். நீண்ட நாட்களுக்குப் பிறகு விஜய் முதிர்ச்சியாக பேசியுள்ளார் என்று டுவிட்டரில் கருத்துக்களைப் பதிவிட்டுள்ளனர் அவரது ரசிகர்கள். அதோடு சன்டிவியில் புலி ஆடியோ வெளியீட்டு விழா ஒளிபரப்பை உலக அளவில் டிரெண்ட் ஆக்கினர்.

புலி படத்தின் ஆடியோ வெளியீடு மகாபலிபுரத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் விஜய், நடிகைகள் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி கபூர், அட்டக்கத்தி நந்திதா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத், இயக்குனர் சிம்பு தேவன் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர்.


சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன், டி.ராஜேந்தர், தரணி, எஸ்.ஜே.சூர்யா, நடிகர்கள் ஜீவா, தம்பி ராமையா, விஜய் சேதுபதி தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி ஞாயிறன்று மதியம் சன் டிவியில் ஒளிபரப்பானது.


பரிட்சைக்கு மார்க்

பரிட்சைக்கு மார்க்

ரசிகர்களின் விசில் சத்தத்திற்கு இடையே பேச ஆரம்பித்தார் விஜய். பொதுவாழ்க்கையில் பரிட்சை எழுத நிறைய பேர் இருப்பாங்க. மார்க் போட சில பேர்தான் இருப்பாங்க. சினிமாவில் பரிட்சை எழுத சில பேர்தான் இருப்பாங்க. மார்க் போடதான் நிறைய பேர் இருப்பாங்க. நாங்க பரிட்சை எழுதியிருக்கோம். நீங்க மார்க் போடுங்க.


தோல்விகளில் பாடம்

தோல்விகளில் பாடம்

நிறைய தோல்விகளால் நான் நிறைய பாடம் கற்றுக் கொண்டேன். என்னுடைய ஒவ்வொரு வெற்றிக்கு பின்னும், நிறைய அவமானங்கள் இருக்கிறது. அந்த அவமானங்களை என்னுடைய வெற்றிக்காக பயன்படுத்திக்கொண்டேன் என்றார்.


பொய்யாக நேசிக்க மாட்டேன்

பொய்யாக நேசிக்க மாட்டேன்

அடுத்த நிமிஷம் என்பது நிச்சயமில்லாத வாழ்க்கை. எனக்கும் என் ரசிகர்களுக்கும் மத்தவங்கள வாழ வைத்துதான் பழக்கம். எனக்கு உண்மையா ஒருத்தரை வெறுக்கத் தெரியும். ஆனால், பொய்யாக ஒருத்தரை நேசிக்க தெரியாது என்றார்


தியேட்டர்ல பாருங்க

தியேட்டர்ல பாருங்க

இந்த படத்தை கண்டிப்பாக அனைவரும் தியேட்டரில் சென்று பாருங்கள். அதுதான், கஷ்டப்பட்டு படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு நீங்கள் செய்த பேருதவியாக இருக்கும் என்று கூறியதோடு அடுத்தவங்களை சந்தோசப்படுத்தரமாதிரி இருக்கணும் என்றார்.


எம்.ஜி.ஆர் கதை

எம்.ஜி.ஆர் கதை

விழாவில் ரசிகர்களைப் பார்த்து என்ன நண்பா என்று சொன்ன உடன் எழுந்த கரவொலி அடங்க வெகுநேரம் ஆனது. எம்.ஜி.ஆர் நடித்த பல்லாண்டு வாழ்க திரைப்படத்தில் திருடர்களை திருத்தும் கதையைச் சொல்லி அசத்தினார் விஜய்.


டிரெண்ட் ஆக்கிய ரசிகர்கள்

சன்டிவியில் புலி படத்தில் பாடல் வெளியீட்டு விழா ஒளிபரப்பான போதே ரசிகர்கள் டுவிட்டரில் தங்களின் வேகத்தை காட்ட ஆரம்பித்து விட்டார்கள். #PuliAudioLaunchInSunTV என்ற ஹேஷ்டேக் போட்டு கருத்துக்களை பதிவிட்டதோடு அதை உலக அளவில் டிரெண்ட் ஆக்கினார்கள்.


என்ன நண்பா

விழாவில் தெளிவாகவும், அழுத்தமாகவும் பேசிய விஜய், ரசிகர்களைப் பார்த்து என்ன நண்பா என்று கேட்டது அனைவரையும் ரசிக்க வைத்தது.


பேச்சில் ஒரு முதிர்ச்சி

வெற்றிகளை பெறும் முன் தான் பட்ட அவமானங்களைப் பற்றி கூறிய விஜய்... இந்த அவமானங்களை தான் பெட்ரோல் மாதிரி பயன்படுத்தியதாக கூறினார். அவமானத்தைக் கண்டு அஞ்சி ஓடவில்லை. அதை வெற்றியாக மாற்றிக் காட்டினேன் என்றும் தெரிவித்தார்.


எல்லாம் விஜய் மயம்தான்

சன்டிவியில் புலி ஆடியோ வெளியீட்டு விழா ஒளிபரப்பான அதே நேரத்தில் விஜய் டிவியில் நண்பன் திரைப்படம் ஒளிபரப்பானது. ஜெயா டிவியில் உதயா திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது எல்லாமே விஜய் மயமாக இருக்க அவரது ரசிகர்கள் கொண்டாடி தீர்த்துவிட்டனர்.


English summary
The trailer of Ilayathalapathy Vijay’s Puli looks stunning. #PuliAudioLaunchInSunTV hashtag world wide trend on Twitter

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil