புனித் ராஜ்குமார் குடும்பத்தில் அடுத்த அதிர்ச்சி மரணம்... கவலையில் ரசிகர்கள்
பெங்களூர் : கன்னட சூப்பர்ஸ்டார் புனித் ராஜ்குமார் உயிரிழந்த சோகம் மற்றும் அதிர்ச்சியில் இருந்தே ரசிகர்கள் இன்னும் மீளாத நிலையில், அவரின் குடும்பத்தில் நடந்துள்ள அடுத்த அதிர்ச்சி மரணம் அனைவரையும் கவலையடைய வைத்துள்ளது.
கன்னட சூப்பர் ஸ்டாரான புனித் ராஜ்குமார், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து கொண்டிருந்த போது அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

46 வயதாகும் புனித் ராஜ்குமாரின் மரணம் திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்தது. அவரது மரணத்திற்கு பிறகு அவர் கடைசியாக நடித்த படங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதனை பார்த்து ரசிகர்கள் கண்ணீர் விட்டு, புனித் ராஜ்குமாரின் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் மற்றொரு அதிர்ச்சியாக புனித் ராஜ்குமாரின் மாமனார் பக்மனே ரேவநாத் பிப்ரவரி 20 அன்று மாரடைப்பால் உயிரிழந்தார். 78 வயதாகும் அவருக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பே ஆஞ்சியோபிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாம். இவர் NHAIன் சீஃப் இன்ஜினியராக பணியாற்றியவர்.
மருமகன் புனித் ராஜ்குமாரின் திடீர் மரணத்திற்கு பிறகு பக்மனே, அதீத மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இருந்தும் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த அவர் நேற்று காலை திடீர் என உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு, பெங்களூர் எம்.எஸ்.ராமைய்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு , சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
புனித் ராஜ்குமாரை போலவே பக்மனேவும் தனது கண்களை தானம் செய்துள்ளார். புனித் ராஜ்குமாரின் மரண அதிர்ச்சியில் இருந்தே இன்னும் வெளிவராத நிலையில் அவரது குடும்பத்தில் மற்றொரு நபரும் திடீரென உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பலரும் புனித் ராஜ்குமாரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











