மீண்டும் சரித்திரக் கதையில் நடிக்கிறாரா ரஜினி?

By Shankar

சென்னை: கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் அடுத்து ரஜினி நடிக்கவிருக்கும் படம் சரித்திரக் கதையை மையமாகக் கொண்டது என தகவல்கள் கசிந்துள்ளன.

ரஜினியின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பே இன்னும் வெளிவராத நிலையில், அந்தப் படத்தின் கதை பற்றிய தகவல்கள் கசிய ஆரம்பித்துள்ளது.

சரித்திர ஆர்வம்

சரித்திர ஆர்வம்

ரஜினிக்கு சரித்திரக் கதைகளில் ஆர்வம் அதிகம். ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தானாம்.. என்று ஆரம்பிக்கிற கதைகளைப் படிக்கவே தனக்கு ஆர்வம் என ரஜினி ஏற்கெனவே சொன்னது நினைவிருக்கலாம்.

20 ஆண்டுகளாக சுமந்த கதை

20 ஆண்டுகளாக சுமந்த கதை

ரஜினி கடந்த ஆண்டு தன் பிறந்த நாள் விழாவில் ராணா படத்தின் கதையைச் சொன்னது நினைவிருக்கலாம். அந்தக் கதையை அவர் சொன்ன விதம், அது எத்தனை வலுவானது என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. முழுக்க முழுக்க சரித்திரக் கதை. அதை ரஜினியே உருவாக்கியிருந்தார். தன் மனதில் 20 ஆண்டுகளாகச் சுமந்த கதை அது என்பதையும் தெரிவித்திருந்தார்.

ராணா...

ராணா...

அந்தக் கதையைத்தான் ராணா என்ற தலைப்பில் 2011-ல் படமாக்க முயன்றனர். ஆனால் முதல் நாளே ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அதன் பிறகு நடந்ததெல்லாம் அனைவருக்கும் தெரியும்.

கோச்சடையான்

கோச்சடையான்

ரஜினியின் உடல்நிலையைக் கவனத்தில் வைத்து மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட படம்தான் கோச்சடையான். இதுவும் சரித்திரக் கதைதான். மே மாதம் முதல் வாரத்தில் படம் வெளியாகிவிடும் என தெரிகிறது.

மீண்டும் சரித்திரக் கதை

மீண்டும் சரித்திரக் கதை

இந்த நிலையில்தான் ரஜினியின் புதுப் படத்துக்கான வேலைகள் நடந்து வருகின்றன. முத்து, பாட்ஷா மாதிரி ஒரு அதிரடி ஆக்ஷன் படமாக இந்தப் புதிய படம் உருவாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால் இல்லை இல்லை... இதுவும் சரித்திரக் கதைதான் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினி கதை

ரஜினி கதை

ரஜினி உருவாக்கிய சரித்திரக் கதையில் தேவையான மாற்றங்கள் செய்து வேறு தலைப்பில் படமாக்க முயல்வதாகக் கூறப்படுகிறது. அதற்காகத்தான் அனுஷ்கா- சோனாக்ஷி என கம்பீரத்தன்மையும் கவர்ச்சியும் மிக்க நாயகிகளையும் ஒப்பந்தம் செய்துள்ளார்களாம்.

ஆனால் இவையெல்லாமே அனுமானங்கள்தான்.. டிஸ்கஷனிலிருக்கும் ரஜினியும் ரவிக்குமாரும் சொன்னால்தான் உண்டு!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X