»   »  'இது சரியா.. இப்படி நடிச்சா ஓகேவா.. இந்த ஸ்டைல் சரியா இருக்குமா?' -பிரமிக்க வைத்த ரஜினி

'இது சரியா.. இப்படி நடிச்சா ஓகேவா.. இந்த ஸ்டைல் சரியா இருக்குமா?' -பிரமிக்க வைத்த ரஜினி

Posted By:
Subscribe to Oneindia Tamil

உச்ச நட்சத்திரங்கள் அந்த நாற்காலியில் ரொம்ப காலம் வீற்றிருக்கக் காரணம் அவர்களின் தொழில் நேர்த்திதான். இந்த விஷயத்தில் ரஜினி பற்றி புதிதாகச் சொல்ல வேண்டியதில்லை.

தாணு தயாரிப்பில் ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் அவர் நடிக்கிறார் அல்லவா. அந்தப் படத்துக்கு ஒத்திகை நடந்து வருகிறது.

ஒத்திகை

ஒத்திகை

இதற்கு முன் தான் இயக்கிய அட்டகத்தி மற்றும் மெட்ராஸ் படங்களுக்கு இப்படித்தான் ஒத்திகை நடத்தினாராம் ரஞ்சித். அதேபோல ரஜினி படத்துக்கும் நடத்த முடிவு செய்ய, அதற்கேற்ற மாதிரி ஆபீஸ் போட்டுக் கொடுத்துள்ளார்.

நீங்க வரவேணாம் சார்

நீங்க வரவேணாம் சார்

இந்த ஒத்திகைக்கு அத்தனை கலைஞர்களும் வந்துவிட வேண்டும் என்று கூறினாராம். ரஜினியிடம் நீங்க வர வேணாம் சார், நேராக ஷூட்டிங் வந்தா போதும் என்றாராம்.

சடாரென கிளம்பிச் சென்றார்

சடாரென கிளம்பிச் சென்றார்

அமைதியாகக் கேட்டுக் கொண்ட ரஜினி, முதலில் ஒத்திகைக்குப் போகவில்லை. நேற்று திடீரென கிளம்பி, ஒத்திகை நடக்கும் இடத்துக்கே ரஜினி, பரபரப்பாகிவிட்டது அந்த இடம்.

தானும் களமிறங்கினார்

தானும் களமிறங்கினார்

சற்று நேரம் வேடிக்கைப் பார்த்துவிட்டுக் கிளம்பிவிடுவார் என நினைத்தார்களாம் முதலில். ஆனால் ரஜினியோ மற்றவர்கள் எப்படி நடிக்கிறார்கள், அந்த காட்சி எப்படி வருகிறது என்பதையெல்லாம் கவனித்துவிட்டு, தனது காட்சி வரும், 'இருங்க நானும் நடிச்சிப் பாத்துக்கிறேன்," என்று களமிறங்க, ரஞ்சித்துக்கு என்ன சொல்வதென்று புரியவில்லையாம்.

பிரமித்த யூனிட்

பிரமித்த யூனிட்

'இது சரியா.. இப்படி நடிச்சா ஓகேவா.. இந்த ஸ்டைல் சரியா இருக்குமா?' என ரஞ்சித்தை கேட்டுக் கேட்டு நடித்துக் காண்பிக்க, அவரை மொத்த யூனிட்டும் பிரமிப்போடு பார்த்திருக்கிறது!

English summary
Rajini has paid a surprise visit to the rehearsal spot of Ranjith directed movie and participated in the rehearsal.
Please Wait while comments are loading...