»   »  வெள்ள நிவாரணம்... ரசிகர்களின் சேவை பெருமிதமளிக்கிறது! - ரஜினிகாந்த்

வெள்ள நிவாரணம்... ரசிகர்களின் சேவை பெருமிதமளிக்கிறது! - ரஜினிகாந்த்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னைக்கு ரசிகர்கள் வழங்கி வரும் உதவி பெருமிதமடைய வைத்துள்ளது என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 12ம் தேதி ரஜினிகாந்தின் பிறந்தநாள். சென்னை மற்றும் தமிழகப் பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை ரத்து செய்தார்.

எனவே பெரிதாக ரசிகர்களும் ரஜினியின் வேண்டுகோளை ஏற்று பிரம்மாண்ட விழாக்களைத் தவிர்த்தனர். ஆனாலும் நற்பணிகளைத் தொடர்ந்தனர்.

Rajini thanked his fans

இந்நிலையில் பிறந்தநாள் அன்று ட்விட்டரில் தனக்கு வாழ்த்துச் சொன்ன அமிதாப் பச்சன், ஆந்திரப்பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோருக்கு ரஜினிகாந்த் நன்றிகளை தெரிவித்துள்ளார்.

இதுதவிர்த்து சென்னைக்குத் தேவையான உதவிகளைச் செய்து வரும் என் ரசிகர்களுக்கு நன்றி. மேலும் இதைத் தாண்டி வேறு எதுவும் என்னை பெருமைப்படவோ, மகிழ்ச்சியடையவோ செய்யாது எனக் கூறியுள்ளார்.

அதே போல் தனது பிறந்தநாளுக்கு வாழ்த்துகள் சொன்ன அனைவருக்கும் நன்றிகளைப் பகிர்ந்துள்ளார் ரஜினிகாந்த்.

English summary
Actor Rajinikanth has conveyed his thanks to his fans who have done lot of relief work on behalf Rajini Welfare Association for Chennai.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil