»   »  ‘நண்பேன்டா’ கமலுக்காக கபாலி ஸ்பெஷல் ஷோ ஏற்பாடு செய்யும் ரஜினி

‘நண்பேன்டா’ கமலுக்காக கபாலி ஸ்பெஷல் ஷோ ஏற்பாடு செய்யும் ரஜினி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காலில் காயம் காரணமாக ஓய்வில் இருக்கும் நடிகர் கமலுக்காக, கபாலி படத்தின் சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்ய ரஜினி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரஜினி நடித்து பா.ரஞ்சித் இயக்கிய கபாலி திரைப்படம் கடந்தவாரம் வெள்ளிக்கிழமை ரிலீசானது. தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிக்கும் இப்படம், தொடர்ந்து நல்ல வசூலைத் தந்து வருகிறது.

இந்நிலையில் அமெரிக்காவில் ஓய்வை முடித்துவிட்டு நேற்று முன்தினம் இரவு சென்னை திரும்பியுள்ளார் ரஜினி.

நலம் விசாரிப்பு...

நலம் விசாரிப்பு...

கபாலியின் வெற்றி மற்றும் ரசிகர்களின் உற்சாக வரவேற்பால் மகிழ்ச்சியாக இருக்கும் ரஜினி, தனது நெருங்கிய நண்பர் கமலின் உடல்நிலை குறித்து அக்கறையுடன் விசாரிக்கவும் மறக்கவில்லை.

காலில் எலும்பு முறிவு...

காலில் எலும்பு முறிவு...

கடந்த சில வாரங்களுக்கு முன் சபாஷ் நாயுடு முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து இந்தியா திரும்பிய கமல், எதிர்பாராதவிதமாக தனது வீட்டு மாடிப்படியில் தவறி விழுந்தார். இதனால் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு அதற்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

ஒத்திவைப்பு...

ஒத்திவைப்பு...

மருத்துவர்களின் ஆலோசனைப்படி தற்போது கமல் ஓய்வில் இருக்கிறார். இம்மாதம் தொடங்க வேண்டிய சபாஷ் நாயுடு படப்பிடிப்பும் வரும் செப்டம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சிறப்புக்காட்சி...

சிறப்புக்காட்சி...

இதற்கிடையே ஓய்வில் இருக்கும் தனது நண்பர் கமலால் கபாலி படத்தைப் பார்க்க முடியவில்லை என்ற வருத்தம் ரஜினிக்கு உள்ளதாம். எனவே, அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதும் அவருக்கென கபாலி சிறப்புக்காட்சிக்கு ஏற்பாடு செய்ய ரஜினி திட்டமிட்டுள்ளதாக அவரது நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல்முறையல்ல...

முதல்முறையல்ல...

இவ்வாறு ரஜினியும், கமலும் தங்களது படங்களை சிறப்புக்காட்சியாக ஒருவருக்கொருவர் போட்டுக் காண்பிப்பது இது முதல்முறையல்ல. ஏற்கனவே, ரஜினி தனது கோச்சடையான் படத்தையும், கமல் தனது உன்னைப்போல் ஒருவன், தசாவதாரம் மற்றும் விஸ்வரூபம் படங்களையும் சிறப்புக்காட்சி ஏற்பாடு செய்து ஒருவருக்கொருவர் காட்டியது நினைவுக் கூறத்தக்கது.

English summary
Superstar Rajinikanth's Kabali is likely to have a special screening for Kamal Haasan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil