கவர் போட்டோவிற்காக நிர்வாணமாக போஸ் கொடுத்த ரன்வீர் சிங்

மும்பை : பாலிவுட் டாப் ஹீரோவும், நடிகை தீபிகா படுகோனின் கணவருமான ரன்வீர் சிங், ஸ்டைலாக ஆடை உடுத்துவதற்கு பெயர் பெற்றவர். விதவிதமாக ஆடைகளில் தோன்றி இவர் கொடுக்கும் போஸ்கள் ரசிகர்களுக்கு எப்போதும் ஃபேவரைட்.

ஆனால் தற்போது மேகசின் ஒன்றின் கவர் போட்டோவிற்காக ஒட்டு துணி கூட இல்லாமல் நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார். ஆடை இல்லாமல் பிறந்த மேனியுடன் வித விதமாக இவர் போஸ் கொடுத்துள்ள போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Ranveer Singh ‘breaks the internet’ as he goes fully naked for Paper magazine cover

இதே மேகசினிற்காக 2014 ல் முதல் முறையாக Kim Kardashian இப்படி போஸ் கொடுத்திருந்தார்.தற்போது ரன்வீர் சிங் இப்படி ஒரு போஸ் கொடுத்திருப்பது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இது பற்றி அந்த மேகசினில் ரன்வீர் அளித்துள்ள பேட்டியில், என்னுடைய ஃபேஷன் மற்றும் புகழ் ஆகியவற்றில் நிர்வாணமான போஸ் கொடுப்பது சாதாரணமானது. இது எனக்கு மிகவும் எளிமையானது என தெரிவித்துள்ளார். தனது படங்கள் பற்றியும் விரிவாக அவர் பேசி உள்ளார் இந்த பேட்டியில்.

பாலிவுட்டில் ரன்வீரின் நிர்வாண போட்டோ வேகமாக பரவி வருகிறது. இது பலரின் எதிர்ப்பை பெற்று தற்போது விவாதத்திற்கும் உள்ளாகி உள்ளது. ஃபேஷன் உலகிலும் இது விவாத பொருளாகி உள்ளது. மிலிண்ட் சோமனின் போஸ் தான் ரன்வீரை இப்படி போஸ் கொடுக்க வைத்துள்ளதாக சிலர் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு சிலர் கடுப்பாகி மில்லிண்ட் என்ன செய்தாலும் அதை ரன்வீரும் செய்வாரா. அவர் செய்ததால் இவரும் செய்ய வேண்டும் என என்ன கட்டாயம் உள்ளது என கேட்டு வருகின்றனர். இன்னும் சிலர், இதை பார்த்து விட்டு தீபிகாவின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என கேட்டுள்ளனர்.

சமீபத்தில் ஷாருக்கான் மற்றும் சல்மான் வீட்டில் அருகிலேயே 119 கோடிக்கு சொத்து வாங்கி பரபரப்பாக பேசப்பட்டார் ரன்வீர். அதைத் தொடர்ந்து, மனைவி தீபிகாவுடன் அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் மனைவியுடன் மிக நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். இப்போது அனைத்தையும் மிஞ்சும் அளவிற்கு நிர்வாண போஸ் கொடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X