»   »  அப்பா சட்டையில் இருந்து 78 ரூபாயை திருடி சென்னைக்கு ஓடி வந்த சமுத்திரக்கனி

அப்பா சட்டையில் இருந்து 78 ரூபாயை திருடி சென்னைக்கு ஓடி வந்த சமுத்திரக்கனி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 10ம் வகுப்பு படித்து முடித்ததும் அப்பாவின் சட்டை பாக்கெட்டில் இருந்து ரூ.78ஐ எடுத்துக் கொண்டு சென்னைக்கு ஓடி வந்ததை மறக்க முடியாது என்கிறார் சமுத்திரக்கனி.

இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், பாடகர், டப்பிங் கலைஞர் என்று பன்முகம் கொண்டவர் சமுத்திரக்கனி. சமூக அக்கறையுடன் அவர் எடுக்கும் படங்கள் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கிறது.


இதனால் கல்லூரி, பள்ளிகளில் நடக்கும் விழாக்களுக்கு அவரை சிறப்பு விருந்தினராக அழைக்க அனைவரும் விரும்புகிறார்கள்.


அப்பா

அப்பா

சமுத்திரக்கனி தான் இயக்கி, நடித்த அப்பா படத்தை ஜெயராமை வைத்து மலையாளத்தில் ஆகாச மிட்டாயீ என்ற பெயரில் ரீமேக் செய்து வருகிறார். இந்த படத்தில் ஜெயராமுக்கு ஜோடியாக இனியா நடிக்கிறார்.


10ம் வகுப்பு

10ம் வகுப்பு

சமுத்திரக்கனி தற்போது கை நிறைய சம்பாதித்து வருகிறார். ஆனால் 10ம் வகுப்பு படித்து முடித்தவுடன் அப்பாவின் சட்டை பாக்கெட்டில் இருந்து ரூ. 78 ரொக்கத்தை எடுத்துக் கொண்டு சென்னைக்கு ஓடி வந்ததை அவரால் இன்றும் மறக்க முடியவில்லை.
காசு

காசு

78 ரூபாயுடன் சென்னைக்கு வந்த சமுத்திரக்கனியால் அங்கு 2 கூட இருக்க முடியவில்லை. மீதமுள்ள பணத்தை வைத்து விழுப்புரம் வரை சென்றுள்ளார். அதற்கு மேல் செல்ல பணம் இல்லாமல் விழுப்புரத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் 5 நாட்கள் வேலை செய்துள்ளார்.


ஊர்

ஊர்

விழுப்புரம் ஹோட்டலில் வேலை செய்ததில் கிடைத்த 25 ரூபாயை வைத்து ஊர் திரும்பியுள்ளார். அதன் பிறகு பல முறை சென்னை வந்தபோதிலும் திருட்டுத்தனமாக வந்ததை தன்னால் மறக்க முடியாது என்கிறார் சமுத்திரக்கனி.


English summary
Director cum actor Samuthirakani said that he couldn't forget his Chennai visit after completing his SSLC exams.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil