»   »  எரவாடா சிறைக் கைதிகளுடன் ‘லுங்கி’ டான்ஸ் ஆடும் சஞ்சய்தத்

எரவாடா சிறைக் கைதிகளுடன் ‘லுங்கி’ டான்ஸ் ஆடும் சஞ்சய்தத்

Subscribe to Oneindia Tamil

மும்பை: சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஷாரூக், தீபிகா கூட்டணியில் பட்டையைக் கிளப்பிய பாடல் 'லுங்கி டான்ஸ்'. சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சமர்ப்பணம் என ஷாரூக் படத்தில் வைக்கப் பட்ட ஸ்பெஷல் பாடல் தான் இந்த 'லுங்கி டான்ஸ்'.

தற்போது இப்பாடலுக்காக நடனம் ஆட பயிற்சி எடுத்து வருகிறாராம் சஞ்சய்தத். சிறையில் இருக்கும் சஞ்சய் எதற்காக இப்பாடலுக்கு நடனப்பயிற்சி எடுத்துக் கொள்கிறார் என குழப்பமாக உள்ளதா..?

இதோ, பின்வரும் ஸ்லைடுகளைப் பாருங்கள் உங்களுக்கே புரியும்....

சிறைக்கைதிகளின் சிறப்பு நிகழ்ச்சி...

சிறைக்கைதிகளின் சிறப்பு நிகழ்ச்சி...

இம்மாதம் 26ம் தேதி, சிறைக் கைதிகளை வைத்து சிறப்பு நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளனர் எரவாடா சிறை அலுவலகர்கள். இந்நிகழ்ச்சி மும்பையில் உள்ள அரங்கம் ஒன்றில் நடைபெற உள்ளது.

பார்வையாளர்களை அசத்த திட்டம்...

பார்வையாளர்களை அசத்த திட்டம்...

இந்த சிறப்பு நிகழ்ச்சியில் கைதிகளின் நடனம், பாடல் மற்றும் மௌன மொழி நாடகம் என பல பிரிவுகளில் பார்வையாளர்களை அசத்த திட்டமிட்டுள்ளனர் சிறைக்கைதிகள்.

கலை நிகழ்ச்சியில் சஞ்சய்....

கலை நிகழ்ச்சியில் சஞ்சய்....

மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி தற்போது எரவாடா சிறையில் இருக்கும் நடிகர் சஞ்சய் தத்தும் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்ள இருக்கிறார். சஞ்சயுடன் சேர்த்து 50 கைதிகள் இந்தக் கலை நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார்கள்.

சஞ்சயின் ‘லுங்கி டான்ஸ்....

சஞ்சயின் ‘லுங்கி டான்ஸ்....

இந்த கலை நிகழ்ச்சியில் சஞ்சய், சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் வரும் ‘லுங்கி டான்ஸ்' பாடலுக்கு நடனமாட இருக்கிறாராம்.

முக்கிய நிகழ்ச்சி...

முக்கிய நிகழ்ச்சி...

இந்த நடனமே கலை நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக பார்வையாளர்களைக் கவரும் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிர கலாச்சாரம்...

மகாராஷ்டிர கலாச்சாரம்...

கலை நிகழ்ச்சியில் மகாராஷ்டிர கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் தர இருக்கிறதாம்.

சிறை வளர்ச்சி நிதி....

சிறை வளர்ச்சி நிதி....

நிகழ்ச்சி மூலம் வசூலாகும் பணத்தை சிறையின் வளர்ச்சி நிதியாக பயன் படுத்த இருக்கிறார்களாம். இப்பணத்தின் மூலம் சிறைக் கைதிகள் முக்கிய தேவைகள் நிறை வேற்றி வைக்கப் படும் என சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வாழ்த்துக்கள் ரோஹித்....

வாழ்த்துக்கள் ரோஹித்....

சிறையிலிருந்து மனைவிக்கும், சில முக்கிய நண்பர்களுக்கும் தொடர்ந்து கடிதம் எழுதி வரும் சஞ்சய், தனது திரை உலக நணபர் ஒருவருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் வெற்றிக்காக அதன் இயக்குநர் ரோஹித் ஷெட்டிக்கு தன் சார்பில் வாழ்த்துகள் தெரிவிக்கும் படி கேட்டுக் கொண்டாராம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Sanjay Dutt and his fellow inmates in Pune's Yerawada Central Jail will participate in a play, as part of a fundraiser, on September 26. Dutt will be among the 50 inmates who will participate in the play. And guess what, he will not only act in it, but is also going to perform to the super-famous song, Lungi Dance, from Chennai Express.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more