கெட்டவன் தூக்கத்தை கலைச்சிடுவாரு.... சந்தானத்தின் ஏஜெண்ட் கண்ணாயிரம் டீசர் வெளியீடு

சென்னை : நடிகர் சந்தானம் தனது பிறந்தநாளை இன்றைய தினம் கொண்டாடி வருகிறார்.

அவரது பிறந்தநாளையொட்டி அவரது நடிப்பில் உருவாகிவரும் ஏஜெண்ட் கண்ணாயிரம் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

வழக்கம் போல காமெடியில் சந்தானம் இந்தப் படத்தில் அதகளம் செய்துள்ளது டீசரின்மூலம் தெரிகிறது.

ஏஜெண்ட் கண்ணாயிரம் படம்

ஏஜெண்ட் கண்ணாயிரம் படம்

நடிகர் சந்தானத்தின் டிக்கிலோனா, சபாபதி படங்கள் அடுத்தடுத்து ஓடிடி மற்றும் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படங்களை அடுத்து தற்போது ஏஜெண்ட் கண்ணாயிரம் என்ற படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

சூட்டிங் நிறைவு

சூட்டிங் நிறைவு

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு கொரோனா பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. தொடர்ந்து சூட்டிங் தொடரப்பட்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நிறைவடைந்தது. வஞ்சகர் உலகம் படத்தை இயக்கிய மனோஜ் பீதா இயக்கத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது.

தெலுங்கு ரீமேக்

தெலுங்கு ரீமேக்

தெலுங்கில் ஹிட்டடித்த ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா படத்தின் தமிழ் ரீமேக்காக இந்தப் படம் உருவாகியுள்ளது. தெலுங்கில் நவீன் பொலிச்செட்டி மற்றும் ஸ்ருதி ஷர்மா லீட் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்நிலையில் ஏஜெண்ட் கண்ணாயிரம் படத்தில் சந்தானத்திற்கு ஜோடி சேர்ந்துள்ளார் ரியா சுமன்.

யுவன் இசை

படத்திற்கு இசையமைத்துள்ளார் யுவன் சங்கர் ராஜா. இந்நிலையில் இன்றைய தினம் சந்தானத்தின் பிறந்தநாளையொட்டி படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. படத்தில் தனியார் டிடெக்டிவ் ஏஜெண்ட்டாக நடித்துள்ளார் சந்தானம்.

கொலை வழக்கு விசாரணை

கொலை வழக்கு விசாரணை

சிறிய சிறிய திருட்டு சம்பவங்களில் துப்பறிந்துவரும் சந்தானம், ஒரு தந்தை தனது மகளின் கொலையை விசாரிக்க வேண்டும் என்று அவரை அணுகும்போது எவ்வாறு செயல்படுகிறார். தொடர்ந்து கதையில் என்ன நடக்கிறது என்பதாக கதை செல்கிறது. இந்தக் கதையை காமெடி கலந்த திரில்லர் படமாக கொடுத்துள்ளார் இயக்குநர்.

Recommended Video

இந்த படத்துக்கு ஏன் சபாபதி TITLE வச்சோம் ? | Director Srinivasa Rao Exclusive | Filmibeat Tamil
காமெடி கலாட்டா

காமெடி கலாட்டா


தனக்கேயுரிய காமெடி கலாட்டாக்களுடன் படத்தில் நடித்துள்ளார் சந்தானம். அவரது முந்தைய படங்கள் அவருக்கு ஓரளவுக்கு கைகொடுத்த நிலையில், தற்போது இந்தப் படம் விரைவில் ரிலீசாக உள்ளது. தனக்கேயுரிய கலாய்ப்பு காமெடியுடன் இந்தப் படத்திலும் களமிறங்கியுள்ளார் சந்தானம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X