»   »  நடிகர் சங்க தலைவர் பதவி:br/ சரத் குமார் விலகல்

நடிகர் சங்க தலைவர் பதவி:br/ சரத் குமார் விலகல்

Subscribe to Oneindia Tamil
சென்னை:

தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக நடிகர் சரத்குமார் அறிவித்துள்ளார்.

விஜயகாந்த்தைத் தொடர்ந்து சமீபத்தில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார் சரத்குமார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற பெயரையும் தனது கட்சிக்கு சூட்டியுள்ளார்.

அரசியலில் ஈடுபட்டுக் கொண்டே நடிகர் சங்கப் பொறுப்பிலும் நீடிப்பீர்களா என்று சரத்குமாரிடம் முன்பு கேட்டபோது, தேவைக்கேற்ப முடிவு எடுப்பேன் என்று பதிலளித்திருந்தார். இந்த நிலையில் நடிகர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக கூறி ராஜினாமா கடிதத்தை நடிகர் சங்கத்திற்கு அனுப்பி வைத்துள்ளாராம்.

சரத் ராஜினாமாவுக்கு அரசியல் கட்சி மட்டும் காரணமல்ல என்று கூறப்படுகிறது. நடிகர்களின் சம்பளத்தில் 5 சதவீதத்தை சங்கத்திற்குத் தர வேண்டும் என சமீபத்தில் தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது.

இது நடிகர், நடிகையர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சரத்குமாருக்கு எதிராக நடிகர், நடிகையர் குரல் கொடுக்கவும் தயாராகி வந்தனர்.

இந்த நிலையில்தான் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளார் சரத்குமார்.
Read more about: sarathkumar

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil