For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

"காப்பாற்றுங்கள்..." பிரதமர் நரேந்திர மோடிக்கு விஜய் அவசர கடிதம்

By Veera Kumar
|

சென்னை: சேவை வரியை ரத்து செய்து சினிமாவை காப்பாற்றுமாறு நடிகர் விஜய், பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

விஜய் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: பல அரிய திட்டங்களாலும், அதிரடி நடவடிக்கையாலும், இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல போராடும் தங்களுக்கு பாராட்டுக்கள். மற்ற துறைகளை போன்று சினிமாத்துறையையும் தாங்கள் நேசிப்பவர் என்பதால் இந்த கோரிக்கையை தங்களுக்கு வைக்கிறேன்.

Service tax on cinema: Vijay writes letter to Modi

சினிமா மக்களை மகிழ்விக்கும் பொழுதுபோக்கு சாதனம் மட்டுமல்ல, அரசுக்கு பல கோடி வருவாயை ஈட்டித் தரும் துறையாகும். ஆனால் கடந்த பல வருடங்களாக சினிமா, கவனிப்பாரின்றி பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. பல திரையரங்குகள், திருமண மண்டபங்களாகவும், வணிக வளாகங்களாகவும் மாறி வருகின்றன.

மத்திய-மாநில அரசுகளுக்கு சினிமா மூலம் பலவிதமான வரிகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் செலுத்தப்படுகின்றன. ஆனால் கடந்த ஆட்சியில் புதிதாக சுமத்தப்பட்ட சேவை வரியால் இந்திய சினிமா பெரிதளவில் பாதிப்படைந்துள்ளது. பல காலங்களாக இந்த தொழிலை மட்டுமே நம்பியிருந்த லட்சக்கணக்கான தயாரிப்பாளர்கள், தியேட்டர் அதிபர்கள், வினியோகஸ்தர்கள், ஏற்றுமதியாளர்கள், நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், சின்னத்திரை கலைஞர்கள் மற்றும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் என அனைவரும் பாதிப்படைந்துள்ளனர். குறிப்பாக, சினிமா தொழிலில் கொடிகட்ட பறிந்த பல முன்னணி நிறுவனங்களும், முக்கிய தயாரிப்பாளர்களும் நஷ்டத்தாலும், விரக்தியாலும், வேறு தொழிலுக்கு செல்லும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

இதே நிலை நீடிக்குமானால் திரைப்படம் எடுக்க முதலீட்டாளர்கள் பயந்து ஒதுங்கிவிடுவார்கள். இதனால் சினிமா தொழில் பாதிக்கப்படுவதோடு இந்த தொழிலை நம்பியிருக்கும் கோடிக்கணக்கான தொழிலாளர்களும் வேலையிழக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். மேலும், கடந்த ஆட்சியில் அமிதாப்பச்சன், ஷாருக்கான், சரத்குமார், மம்முட்டி, மோகன்லால், வெங்கடேஷ், பவன்கல்யாண் மற்றும் இந்திய திரைப்பட வர்த்தக சபைகளும், இந்திய தொழிலாளர் சம்மேளனும், சேவை வரியை ரத்து செய்ய போராடி, மனுக்களும் கொடுத்துள்ளார்கள். இருப்பினும் திரையுலகிற்கு எதிராக சேவை வரி உள்ளது.

ஆகவே சினிமாத்துறைக்கு எதிராகவும், சினிமாத்துறையை நசுக்கிவரும் சேவை வரியை நீக்கி அழிந்து வரும் இந்திய திரையலகை காப்பாற்றும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இதன்மூலம் பல தரமான படைப்புகள் வருவதோடு உலக அரங்கில் இந்திய படைப்புகளும் பேசப்படும். மேலும், பல புதிய முதலீட்டாளர்களும், புதிய திறமையாளர்களும் இந்திய சினிமாவுக்கு வருவார்கள். உலக அரங்கில் இந்திய சினிமா முதன்மை இடத்தை பிடிக்க உற்சாகம் ஊட்டுமாறு சக கலைஞனாக தங்களை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு விஜய் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது தமிழகம் வந்த நரேந்திரமோடியை விஜய் சந்தித்து பேசியிருந்தது நினைவுகூறத்தக்கது.

English summary
Actor Vijay wrote a letter to the prime minister Narendramodi, requesting him to withdraw the service tax which is impose on cinema by previous UPA government.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more