»   »  நம்புங்கய்யா, நானும் ரவுடி தான்யா: இயக்குனர்களை கெஞ்சும் மெகா ஹீரோ

நம்புங்கய்யா, நானும் ரவுடி தான்யா: இயக்குனர்களை கெஞ்சும் மெகா ஹீரோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: முழு நீள ஆக்ஷன் படத்தில் நடிக்க எந்த இயக்குனரும் வாய்ப்பு தருவது இல்லை என்று ஃபீல் பண்ணியுள்ளார் பாலிவுட் நடிகர் ஷாருக்கான்.

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் பெயரை சொன்னாலே காதல் காட்சிகள் தான் அனைவருக்கும் நினைவு வரும். அதிலும் ராகுல் என்ற கதாபாத்திரம் தான் அதிகம் நினைவு வரும்.

Shah Rukh Khan wants to do action movies

ஷாருக்கானுக்கோ முழு நீள ஆக்ஷன் கதையில் நடிக்க வேண்டும் என்று ஆசை உள்ளது. அவர் தனது விருப்பத்தை பல இயக்குனர்களிடம் தெரிவித்தும் அவரை யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை.

தலைநகரம் படத்தில் வடிவேலு நானும் ரவுடி தான் என்று அடிக்கடி கூறியும் யாரும் நம்ப மாட்டார்கள். அதே போன்று தான் நானும் ஆக்ஷன் ஹீரோ தான் என்று ஷாருக் கூறுவதையும் இயக்குனர்கள் நம்ப மறுக்கிறார்கள்.

இயக்குனர்களின் பார்வையில் ஷாருக்கான் என்றைக்குமே ரொமான்ட்டிக் ஹீரோவாகே உள்ளார்.

English summary
Bollywood actor Shah Rukh Khan said, "I wanted to be a macho man on screen. I always wanted to be an action hero. But it still hasn't happened."

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil