»   »  கிறிஸ்டோபர் நோலனின் 'இன்டெர்ஸ்டெல்லர்' பாணியில்... விண்வெளி வீரனாக மாறும் ஜெயம் ரவி?

கிறிஸ்டோபர் நோலனின் 'இன்டெர்ஸ்டெல்லர்' பாணியில்... விண்வெளி வீரனாக மாறும் ஜெயம் ரவி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சக்தி சவுந்தர்ராஜன்- ஜெயம் ரவி கூட்டணி மீண்டும் இணையும் படம் விண்வெளி சம்பந்தப்பட்ட கதை என்று கூறப்படுகிறது.

அடுத்தடுத்து வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து அதில் வெற்றியும் கண்டு வருகிறார் ஜெயம் ரவி.

இதில் கடைசியாக வெளியான மிருதன் படத்தில் ஸோம்பியாக ஜெயம் ரவி நடித்திருந்தார். ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற மிருதன் தமிழ் சினிமாவின் புதிய முயற்சியாகப் பார்க்கப்பட்டது.

மிருதன்

மிருதன்

மிருதனைத் தொடர்ந்து இயக்குநர் சக்தி சவுந்தர்ராஜன் மீண்டும் ஒரு புதிய முயற்சியை கையிலெடுத்திருக்கிறார். ஆமாம் ஜெயம் ரவியை வைத்து இவர் இயக்கும் அடுத்த படம் விண்வெளி சம்பந்தப்பட்ட கதையாம். இருவரின் கூட்டணியில் மிருதன் 2 உருவாகும் என்று அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்க, அதற்கு மாறாக விண்வெளி தொடர்பான கதையில் இந்தக் கூட்டணி மீண்டும் இணையவுள்ளது.

பட்ஜெட் அதிகம்

பட்ஜெட் அதிகம்

தமிழ் சினிமாவில் இதுவரை இந்தக் களத்தில் யாரும் பயணித்ததில்லை என்பதால் இது ஒரு வித்தியாசமான முயற்சியாக பார்க்கப்படுகிறது.
மிருதன் படத்தின் பட்ஜெட் மிகவும் குறைவாக இருந்தது. ஆனால் விண்வெளி தொடர்பான கதை என்பதால் இப்படத்தை மிகவும் அதிக பட்ஜெட்டில் தயாரிக்கவுள்ளனர்.

இன்டெர்ஸ்டெல்லர்

இன்டெர்ஸ்டெல்லர்

ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் 'இன்டெர்ஸ்டெல்லர்' படத்தைப் போன்று இப்படத்தின் கதையை சக்தி சவுந்தர்ராஜன் அமைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக இயக்குநர் தற்போது தீவிரமான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறாராம். மேலும் சென்னையில் இந்தப் படத்திற்கான அரங்குகளை மிகப்பெரிய பொருட்செலவில் அமைத்து படம்பிடிக்க, படக்குழு முடிவு செய்திருக்கிறதாம்.

ஜூலை மாதம்

ஜூலை மாதம்

ஜூலை மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது. சக்தி சவுந்தர் ராஜன் படத்தில் நடிக்கும் நடிக, நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை தேர்வு செய்யும் பணியில், தற்போது தீவிரமாக இறங்கியுள்ளார். விரைவில் இப்படம் குறித்த முழுமையான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூப்பர் ஹீரோ

சூப்பர் ஹீரோ

இன்டெர்ஸ்டெல்லர் படத்தில் மனிதர்கள் வாழத் தகுதியற்றதாக பூமி ஆகிவிட, புதிய கிரகத்தைத் தேடி ஹீரோ செல்வார். வழியில் அவர் எதிர்கொள்ளும் சாகசப்பயணங்களே படத்தின் கதை. அதுபோல இந்தப்படத்தில் ஜெயம் ரவி சூப்பர் ஹீரோவாக மாறுகிறாரா? என்பது தெரியவில்லை. எனவே படம் குறித்த தகவல்கள் வெளியாகும் வரை வழக்கம்போல நாம் காத்திருக்கலாம்.

English summary
After Miruthan Director Shakti Soundar Rajan and Jayam Ravi to Team Up Again for Next Movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil