»   »  ஷமிதாபுக்கும் ரஜினிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை: தனுஷ்

ஷமிதாபுக்கும் ரஜினிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை: தனுஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஷமிதாப் படக் கதைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லை என்று தனுஷ் தெரிவித்துள்ளார்.

ஆர். பால்கி இயக்கத்தில் தனுஷ், அமிதாப் பச்சன், அக்ஷரா ஹாஸன் நடித்துள்ள இந்தி படம் ஷமிதாப். படம் வரும் 6ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் அமிதாப், தனுஷ் ஆகியோர் கலந்து கொண்டு வருகின்றனர்.

ஷமிதாப் கதை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வாழ்க்கை கதை போன்று உள்ளது என்று கூறப்பட்டது.

சூப்பர்ஸ்டார்

சூப்பர்ஸ்டார்

ஷமிதாப் படத்தில் பஸ் கண்டக்டராக இருக்கும் தனுஷ் சினிமாவில் பெரிய சூப்பர் ஸ்டார் ஆகிறார். ரஜினிகாந்த் பஸ் கண்டக்டராக இருந்து சூப்பர் ஸ்டார் ஆனவர் என்பதால் ஷமிதாப் கதை ரஜினியின் வாழ்க்கை கதை என்று கூறப்பட்டது.

தனுஷ்

தனுஷ்

ஷமிதாப் கதைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாரின் வாழ்க்கை வரலாற்றுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று தனுஷ் தெரிவித்துள்ளார்.

முக்கிய மாதம்

முக்கிய மாதம்

இந்த மாதம் தனுஷுக்கு முக்கியமான மாதம் ஆகும். முதலில் ஷமிதாப் அடுத்து அவர் நடித்த அனேகன் என இரண்டு படங்கள் இந்த மாதம் ரிலீஸாகின்றன.

காக்கிச் சட்டை

காக்கிச் சட்டை

சிவகார்த்திகேயனை வைத்து தனுஷ் தயாரித்துள்ள காக்கிச் சட்டை படமும் இந்த மாதம் தான் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Dhanush told that his hindi movie Shamitabh has nothing to do with superstar Rajinikanth.
Please Wait while comments are loading...