»   »  6 கோடிக்கு விற்ற சிவாஜி

6 கோடிக்கு விற்ற சிவாஜி

Subscribe to Oneindia Tamil

சிவாஜி படத்தின் டிவி உரிமையை கலைஞர் டிவி ரூ. 6 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள சிவாஜி படத்தின் டிவி உரிமையை கலைஞர் டிவி வாங்கியுள்ளது. வழக்கமாக இதுபோன்ற முன்னணி ஸ்டார்களின் படங்களை வாங்குவது சன் டிவியாகத்தான் இருக்கும்.

ஆனால் முதல் முறையாக சன் டிவி அல்லாத வேறு ஒரு டிவிக்கு ரஜினிகாந்த்தின் படம் விலை போயுள்ளது.

சிவாஜி படம் குறித்த எதிர்பார்ப்பு உள்ளூரில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் விரிவடைந்து, வியாபித்துள்ளது. கிட்டத்தட்ட 1000 பிரிண்டுகள் வரை இப்படத்துக்குப் போடப்படவுள்ளது. ஒரு பிராந்திய மொழிப் படத்துக்கு இதுவரை இந்த அளவுக்கு பிரிண்டுகள் போடப்பட்டதில்லை என்பதால் இது ஒரு சாதனை அளவாக கூறப்படுகிறது.

அதேபோல படத்தின் விற்பனையும் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிதாக உள்ளதாக கூறப்படுகிறது. படத்தை மினிமம் கியாரண்டி முறையில் வாங்குமாறு ஏவி.எம். நிறுவனம் கூறியபோது அதை ஏற்க மறுத்த தியேட்டர் உரிமையாளர்களில் ஒரு பகுதியினர், பர்சன்டேஜ் அடிப்படையில்தான் படத்தை வாங்க முடியும் என்று முரண்டு பிடித்தனர்.

ஆனால் பர்சன்டேஜ் முறையில் விற்க முடியாது என்று ஏவி.எம். தரப்பு உறுதியாக இருந்ததால், பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. இதையடுத்து ஏவி.எம். நிறுவனம் படு ஜாக்கிரதையாக, சென்னை நகர விநியோக உரிமையை தியேட்டர் உரிமையாளர் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதனிடம் கொடுத்து விட்டது.

அதேபோல கோவை உரிமையை திருப்பூர் சுப்ரமணியத்திற்குக் கொடுத்து விட்டது. இந்த நிலையில்தான் கலைஞர் டிவிக்கு சிவாஜி படம் விற்கப்பட்டது. இதைக் கேள்விப்பட்டதும் தியேட்டர்காரர்களுக்கு இனிமா சாப்பிட்டது போல ஆகி விட்டதாம்.

ஆளுங்கட்சியான கலைஞர் டிவி சிவாஜியை வாங்கியதால், எதற்கு வீண் வம்பு என்று பயந்து போன தியேட்டர்காரர்கள், ஏவி.எம். நிறுவனத்தை அணுகி, மினிமம் கியாரண்டி முறையிலேயே படத்தை வாங்கிக் கொள்கிறோம் என்று கூறி விட்டனராம். இதன் மூலம் தியேட்டர்காரர்களால் எழுந்த பிரச்சினை விலகி ஏவி.எம். சரவணன் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளார்.

சிவாஜியை, கலைஞர் டிவி இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் தொகை கொடுத்து வாங்கியுள்ளதாம். அதாவது ரூ. 6 கோடிக்கு படம் விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து ஏவி.எம். நிறுவனத்திடம் கேட்டபோது கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil