»   »  கமல் படத்தலைப்பாவது கை கொடுக்குமா? சிபிராஜின் அடுத்த அட்டம்ட்!

கமல் படத்தலைப்பாவது கை கொடுக்குமா? சிபிராஜின் அடுத்த அட்டம்ட்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிக்க வந்து கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் ஆகிவிட்டது சத்யராஜ் மகன் சிபிக்கு. ஆனால் ஜான் ஏறினால் முழம் சறுக்குகிறது. நாய்கள் ஜாக்கிரதைக்குப் பிறகு பெரிய ரவுண்ட் வருவார் என்று பார்த்தால், அடுத்த படம் அவுட்.. ஜீவாவுக்கு வில்லனாக டீப்ரமோஷன்...

இப்போது அடுத்த முயற்சியைத் தொடங்கியுள்ளார். இதுவும் சொந்தப் படம்தான்.

Sibiraj uses Kamal Hassan's movie title

இந்தப் படத்துக்கு சத்யா என்ற கமல் படத் தலைப்பை வைத்துள்ளார். சத்யா படம் 1988-ல் வெளியானது. சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார்.

இறுதிகட்ட படப்படிப்பில் இருக்கும் சிபிராஜின் சத்யா' படத்தை சைத்தான்' புகழ் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார்.

சத்யராஜின் சொந்த நிறுவனமான நாதாம்பாள் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்து வருகிறார்.

சிபிராஜுடன் இணைந்து ரம்யா நம்பீசன், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு, சதீஷ், ஆனந்தராஜ் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.

English summary
Sibiraj has got permission to use Kamal's 1988 released movie Sathya for his next venture.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil