»   »  கன்னிகளை மாற்றும் காள

கன்னிகளை மாற்றும் காள

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிம்புவின் வம்புக்கு முடிவே இல்லை போலும். அவர் நடிக்கவுள்ள காள படத்தின் நாயகி குறித்து தொடர்ந்து குழப்பமான செய்திகள் வரிசை கட்டி ரசிகர்களைக் குழப்பி வருகின்றன.

திமிரு பட இயக்குநர் தருண் கோபியின் இயக்கத்தில், சிம்பு நாயகனாக நடிக்க உருவாகும் படம் காள. இப்படத்தில் நடிக்க பல முன்னணி நடிகைகளை அணுகினார் சிம்பு.

முதலில் ஆசினிடம் போனார். அவர் மறுத்து விடவே, மீரா ஜாஸ்மின், பாவனா என பலரையும் அணுகினார். எல்லோரும் சாரி சொல்லி விடவே, கடைசியில் தனது பள்ளித்தோழி திரிஷாவிடம் போய் நின்றார். திரிஷா தன்னுடன் நடிக்க ஒப்புக் கொண்டு விட்டதாக சிம்பு தரப்பிலிருந்து செய்தி பரப்பப்பட்டது.

சினிமா உலகில் பப்ளிசிட்டி ஸ்டண்ட்டுள் சகஜம். படத்துக்கு பப்ளிசிட்டி தேட ஒவ்வொருவரும் ஒரு வழியைக் கையாளுவார்கள். அந்த வகையில்தான் எந்த ஹீரோயினும் நடிக்க முன்வராத நிலையில் நடிக்க ஒப்புக் கொண்டு விட்டார் என்று சிம்பு தரப்பிலிருந்து செய்திகள் கிளம்பின.

ஆனால் திரிஷாவோ, காள படம் குறித்து கேட்டாலே கண்டுக்காமல் போய் விடுகிறார். இதிலிருந்தே அவர் அந்தப் படத்தில் நடிக்கவில்லை என்பது உறுதியாகிப் போனது.

லேட்டஸ்டாக தெலுங்குத் திரையுலகின் இளம் புயல் பூனம் சிம்புவுடன் ஜோடி போடப் போவதாக கூறப்பட்டது. ஆனால் சிம்பு படம் பற்றி கவலையே படவில்லையாம், காதிலேயே போட்டுக் கொள்ளவில்லையாம் அவர். எனவே இதுவும் புஸ்ஸாகிப் போனது.

இந்த நிலையில் 3 நாட்களுக்கு முன்பு இயக்குநர் தருண்கோபி, சிம்புவின் நாயகியாக ஜெனீலியா புக் பண்ணப்பட்டுள்ளதாகவும், உயிர் சங்கீதா முக்கியப் பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். ஆனால் இப்போது இதிலும் குழப்படி நடந்துள்ளது.

ஜெனீலியா நடிக்கவில்லையாம். அவருக்குப் பதில் முனி பட நாயகி வேதிகாவை பார்த்துப் பேசியுள்ளனராம். அவர் ஒப்புக் கொள்வார் போலத் தெரிவதாக கூறப்படுகிறது. திட்டமிட்டபடி உயிர் சங்கீதாவும் படத்தில் உள்ளாராம். முன்னாள் கனவுக் கன்னி ரேகா சிம்புவின் அம்மாவாக நடிக்கவுள்ளார்.

காள படத்தின் நாயகி யார் என்ற குழப்பத்தில் இதுதான் லேட்டஸ்ட். மே மாதம் பூஜை போடப் போகிறார்கள். அதில் ரேகாவும் கலந்து கொள்வதாக கூறியுள்ளாராம்.

பூஜைக்குள் ஹீரோயின் மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil