Don't Miss!
- News
"ஹிட்லர் தெரியுமா உங்களுக்கு.. மோடிக்கும் அதே கதிதான்.." சித்தராமையா சொன்னதும்.. கொதித்தெழுந்த பாஜக
- Sports
U-19 மகளிர் உலக கோப்பை- 59 ரன்களில் சுருண்ட இலங்கை.. இந்திய அணி அபார வெற்றி
- Finance
Budget 2023:பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் 5 முக்கிய அறிவிப்புகள்..!
- Automobiles
டாடா எலெக்ட்ரிக் கார்களின் கதையை முடிக்க போகுது! மிகவும் விலை குறைவான மாடலுக்கு புக்கிங் தொடக்கம்!
- Lifestyle
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் பிப்ரவரி 15 வரை இந்த 5 ராசிக்கு அட்டகாசமா இருக்கும்...
- Technology
கேப் விடாமல் தூள் கிளப்பும் ரெட்மி: மொத்த பேரின் கவனத்தையும் ஈர்க்கும் டர்போ ஸ்மார்ட்போன்!
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
இயக்குனர் ராம் இயக்கத்தில் புத்தராக நடிக்கிறாரா சிம்பு?
சென்னை : வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது
அடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் 3வது முறையாக கூட்டணி அமைத்து வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் சிம்பு நடித்து வருகிறார்
ராம் இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ள புதிய திரைப்படத்தில் புத்தர் போன்ற கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
எவ்வளவு உயரத்திற்கு போனாலும் இயல்பை மாத்திக்காத குணம்... வெங்கட் பிரபு பாராட்டு யாருக்கு?

சிம்பு முஸ்லிம் இளைஞனாக
இளைஞர்களுக்கு பிடித்தவாறு தொடர்ந்து கலகலப்பான காமெடி படங்களை இயக்கி வந்த இயக்குனர் வெங்கட்பிரபு சற்று வித்தியாசமாக டைம் லூப் பாணியில் இயக்கிய திரைப்படம் மாநாடு. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இப்படம் பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறாமல் இருந்தது இந்த நிலையில் ஒரு வழியாக அனைத்து பிரச்சனைகளும் சுமூகமாக தீர்த்து வைக்கப் பட்டு படப்பிடிப்பும் முடிந்து கடந்த தீபாவளிக்கு இப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் சிம்பு முஸ்லிம் இளைஞனாக அசத்தியிருப்பார். டைம் லூப் பாணியில் வெளியான இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா வில்லனாக மிரட்டி இருக்க படம் பட்டையை கிளப்பியது

வெந்து தணிந்தது காடு
மாநாடு வெற்றியைத் தொடர்ந்து இப்பொழுது இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வருகிறார். சிம்பு மற்றும் கௌதம் மேனன் ஏற்கனவே விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா உள்ளிட்ட படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர் இப்பொழுது இந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள படத்திற்கு வெந்து தணிந்தது காடு என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க ஐசாரி கணேஷ் தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை எட்டி உள்ளது இதில் நடிகை ராதிகா சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஆக்ஷன் திரில்லர் கதை களத்தில் இப்படம் உருவாகி வருகிறது

சிம்புவின் 50 வது படம்
வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து சிம்புவுக்கு பத்து தல மற்றும் கொரானா குமார் ஆகிய படங்களில் நடிக்க உள்ளார் இந்த நிலையில் சிம்புவின் 50 வது படம் மிகவும் ஸ்பெஷலாக இருக்க வேண்டும் என்பதற்காக இயக்குனர் ராமுடன் கூட்டணி அமைக்க உள்ளார். தொடர்ந்து தரமான படைப்புகளை கொடுத்து சர்வதேச அளவில் விருதுகளை வென்று வரும் இயக்குனர் ராம் இப்பொழுது நிவின்பாலி அஞ்சலி நடிப்பில் உருவாகி வரும் இலங்கை தமிழர்களை பற்றிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

புத்தரின் கதாபாத்திரத்தை போல
இந்த படத்தை தொடர்ந்து சிம்பு உடன் கூட்டணி அமைத்து இயக்க இருக்கும் ராம் அதில் சிம்புவின் கதாபாத்திரத்தை புத்தரின் கதாபாத்திரத்தை போல எழுதி உள்ளதாக கூறப்படுகிறது. புத்தர் எப்படி அரசனாக இருந்து பின் துறவியாக மாறினாரோ அதேபோல சிம்புவின் கதாபாத்திரமும் இப்படத்தில் அமைக்கப்பட்டுள்ளதாம் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.