Don't Miss!
- Lifestyle
நீங்க நுங்கை விரும்பி சாப்பிடுபவரா? அப்ப உங்களுக்கு பல அதிசய நன்மைகள் காத்திருக்காம்...!
- Sports
எங்க கிட்டயும் படைகள் இருக்கு..கேஜிஎப் வசனத்தை பேசிய பாட் கம்மின்ஸ்..இந்திய அணிக்கு பாராட்டு
- News
செந்தில் முருகனுக்கு அதிமுகவில் முக்கிய பதவி.. ‘கைம்மாறு’ செய்யும் ஓபிஎஸ்.. அப்போ கன்ஃபார்மா?
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Automobiles
மாருதியின் புதுமுக காரை டெலிவரி பெற்ற ஜப்பான் தூதரக தலைவர்! எந்த காருனு தெரிஞ்சா நீங்களும் வாங்க விரும்புவீங்க
- Finance
மார்ச் மாதம் கெடு.. அதானி குழுமத்திற்கு வந்த புதிய பிரச்சனை..!
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
வைரலான சிம்பு படத்தின் புதிய அப்டேட்... ரசிகர்கள் உற்சாகம்!
சென்னை : நடிகர் சிம்புவின் நடிப்பில் உருவாகி வரும் படம் வெந்து தணிந்தது காடு. கௌதம் மேனன் இயக்கத்தில் இந்தப் படத்தின் சூட்டிங் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் தமிழணங்கே போட்டது இதற்காகத்தானா? சமூக வலைதளத்தில் விவாதத்தை கிளப்பிய நெட்டிசன்கள்!

நடிகர் சிம்பு
நடிகர் சிம்பு மாநாடு வெற்றிக்கு பிறகு மிகவும் பரபரப்பாக காணப்படுகிறார். அடுத்தடுத்த படங்களில் சிறப்பாக நடித்து வருகிறார். கேரக்டருக்காக எப்போதுமே மெனக்கெடாத அவர் தற்போது உடலை இளைப்பதாகட்டும், கேரக்டரில் வித்தியாசம் காட்டுவதாகட்டும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

வெந்து தணிந்தது காடு படம்
தற்போது வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரேனா குமார் என அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். முன்பு அவர் மீது தரப்பட்ட பல மோசமான கமெண்ட்கள் தற்போது இல்லாமல் பார்த்துக் கொள்கிறார். சமத்தாக ஷூட்டிங்கில் பங்கேற்று நடித்துக் கொடுப்பதாகவும் கூறப்படுகிறது.

இறுதிக்கட்ட படப்பிடிப்பு
தற்போது கௌதம் மேனன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. சில பேட்ச் வொர்க்கிற்காக படக்குழு தற்போது வேலை செய்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏஆர் ரஹ்மான் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சிறப்பான கூட்டணி
கௌதம் மேனன் -சிம்பு கூட்டணி முந்தைய படங்களில் சிறப்பான அதிர்வுகளை ஏற்படுத்தியது. அந்தப் படங்களில் காதல் தூக்கலாக இருந்தது. இந்நிலையில் தற்போது இந்தக் கூட்டணி வெந்து தணிந்தது காடு படத்தில் மீண்டும் இணைந்துள்ளது. இந்தப் படத்தில் பல கெட்டப்புகளில் சிம்பு நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இளைத்த சிம்பு
படத்தில் இளைத்த சிம்புவையும் போஸ்டர்களில் காண முடிந்தது. இந்நிலையில் இந்தப் படத்தின் அடுத்த அப்டேட்டை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. படத்தின் சூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் சிம்பு பகிர்ந்துள்ளார். சூரிய ஒளியில் இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் தற்போது வைரலாகி வருகிறது.