»   »  'இது நம்ம ஆளு' படத்தின் வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் நன்றி- சிம்பு

'இது நம்ம ஆளு' படத்தின் வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் நன்றி- சிம்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இது நம்ம ஆளுவிற்காக உழைத்த படக்குழுவினர் அனைவருக்கும் நடிகர் சிம்பு தனது நன்றிகளைத் தெரிவித்திருக்கிறார்.

கடந்த 27ம் தேதி சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா, சூரி, சந்தானம் நடிப்பில் வெளியான படம் இது நம்ம ஆளு.


3 வருடப் போராட்டங்களுக்குப் பின் வெளியான இப்படம் இளைய தலைமுறையினரிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.


நீங்க இல்லாம

நீங்க இல்லாம

இந்நிலையில் இப்படத்தை வெற்றிப்படமாக்கிய அனைவருக்கும் சிம்பு தனது நன்றிகளைத் தெரிவித்திருக்கிறார். ''இப்படத்திற்கு கிடைத்த வரவேற்புக்கு நன்றி. இது நம்ம ஆளு படத்தின் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் நன்றி. நீங்க இல்லாம நான் இல்ல. இயக்குநர் பாண்டிராஜுக்கும் நன்றி அவரால்தான் இந்த வெற்றி சாத்தியமானது.


நயன்தாரா

நயன்தாரா

இப்படத்தின் முக்கிய அங்கம் வகித்த நயன்தாராவுக்கு நன்றி. அதேபோல சூரியின் கடின உழைப்பு, அர்ப்பணிப்புக்கு நன்றி. இது நம்ம ஆளு படத்தின் தயாரிப்பாளர்களான அப்பா, அம்மா மற்றும் படத்தை வாங்கி வெளியிட்ட ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் அனைவருக்கும் நன்றி.


பத்திரிகையாளர்கள்

பத்திரிகையாளர்கள்

இப்படத்தின் வெற்றிக்கு உதவிய பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. அதேபோல எனது ரசிகர்கள் காட்டிய அன்பு, ஆதரவுக்கும் நன்றி. ரசிகர்களுக்கு எவ்வளவு நன்றி தெரிவித்தாலும் போதாது.மீண்டும் ஒருமுறை இயக்குநர் பாண்டிராஜ்க்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


ஆண்ட்ரியா

ஆண்ட்ரியா

கொடுத்த வேடத்தில் சிறப்பாக நடித்துக் கொடுத்த ஆண்ட்ரியாவுக்கு நன்றி. எனது அன்பு சகோதரன் குறளரசன் மற்றும் தன்னுடைய அதிரடி நடனத்தால் கலக்கிய அடா ஷர்மா ஆகியோருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


யாரையாவது

யாரையாவது

இதில் யாரையாவது நான் விட்டிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள். இந்த வெற்றி எல்லோருக்கும் சொந்தமானது. அதேபோல அச்சம் என்பது மடமையடா டிரெய்லருக்கு நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி. இப்படத்தின் பாடல்கள் மற்றும் இசை விரைவில் வெளியாகவுள்ளது'' என்று தெரிவித்திருக்கிறார்.


மேலும் இது நம்ம ஆளு படத்தின் வெற்றியை கொண்டாடப் போவதாகவும் சிம்பு கூறியிருக்கிறார்.English summary
Simbu Thanked Idhu Namma Aalu Team and His Fans.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos