»   »  ஆசின் இல்லை- சிம்பு

ஆசின் இல்லை- சிம்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil


கெட்டவன் படத்தில் லேகா வாஷிங்டனுக்குப் பதில் ஆசின் நடிக்கவிருப்பதாக வந்துள்ள செய்திகள் தவறு என்று சிம்பு கூறியுள்ளார்.

Click here for more images

தெளிவாக, தீர்க்கமாக, வெளிப்படையாக பேசுபவர், முடிவெடுப்பவர் சிம்பு. ஆனால், கெட்டவன் பட நாயகி விவகாரத்தில் மட்டும் கொஞ்சம் மெளனச் சாமியாகி விட்டார் சிம்பு.

சிம்பு நடித்து வரும் கெட்டவன் படத்தில் நாயகியாக நடிப்பவர் லேகா வாஷிங்டன். பிராமணப் பெண் கேரக்டரில் இதில் அவர் நடிக்கிறார்.

ஆனால் திடீரென இவரது நடிப்பு மீது சிம்புவுக்கு திருப்தி வரவில்லை என்றும், இதனால் லேகாவை நீக்கி விட்டு ஆசின் அல்லது திரிஷாவைப் போட சிம்பு தீர்மானித்திருப்பதாக செய்திகள் வந்தன.

ஆனால் இதை லேகா உடனடியாக மறுத்தார். தான் தொடர்ந்து கெட்டவனில் நடித்து வருவதாக கூறிய லேகா, அதற்கு ஆதாரமாக, சிம்புவுடன் தான் நடிப்பது போன்ற காட்சிகள் அடங்கிய சிடியையும் பத்திரிக்கை அலுவலகங்களுக்கு அனுப்பி வைத்தார்.

ஆனால் இந்த விவகாரம் குறித்து சிம்பு தொடர்ந்து மெளனம் அனுஷ்டித்து வந்தார். லேகா இருக்கிறாரா, இல்லையா, ஆசின் நடிக்கப் போகிறாரா, இல்லையா என்று சிம்புவிடம் கேட்டபோது, லேகா குறித்து கூறுவதற்கு இது பொருத்தமான நேரமல்ல.

எனது முடிவை நான் எப்போது எடுத்தாலும் அதை பகிரங்கமாகவே அறிவிப்பேன். ஒரு முடிவை எடுத்தால் நிச்சயம் அதை பத்திரிக்கைகளுக்கு தெரிவிப்பேன்.

ஆனால் லேகாவுக்குப் பதில் ஆசின் நடிக்கவிருப்பதாக சிலர் செய்தி வெளியிட்டுள்ளனர். அதில் உண்மை இல்லை என்றார் சிம்பு.

தெளிவாகக் குழப்புகிறாரப்பா சிம்பு!

Read more about: asin kettavan lekha washington simbu

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil