விஜய்யுடன் நான்...20 ஆண்டுகளுக்கு முந்தைய ஃபோட்டோவை பகிர்ந்த ஸ்ரீமன்

சென்னை : நடிகர் விஜய் யாருடனுடன் அதிகம் பழக மாட்டார். அமைதியான டைப் என கோலிவுட்டில் பொதுவாக அனைவரும் கூறுவார்கள். ஆனாலும் விஜய்க்கு ரசிகர்கள் மட்டுமல்ல நண்பர்களும் ஏராளம். திரையுலகில் உடன் நடிப்பவர்கள் பலரும் விஜய்யின் நெருங்கிய நண்பர்களாக உள்ளனர்.

sriman shares 20 years back photo with vijay

அப்படி விஜய்யின் நெருங்கிய நண்பர்களில் ஸ்ரீநாத், சஞ்சீவ், ஸ்ரீமன் ஆகியோரும் அடங்குவர். இப்படி விஜய்க்கு நெருக்கமான நண்பர்கள் அவ்வப்போது விஜய் பற்றிய பழைய நினைவுகளையும் ஃபோட்டோக்களையும் பகிர்வது வழக்கம். அந்த வகையில் தற்போது 20 ஆண்டுகளுக்கு முன் விஜய்யுடன் எடுத்துக் கொண்ட ஃபோட்டோக்கள் சிலவற்றை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார் நடிகர் ஸ்ரீமன்.

வசீகரா பட ஷுட்டிங்கின் போது விஜய்யும், ஸ்ரீமனும் காலையில் இருந்து மதியம் வரை ஒரே இடத்தில் அமர்ந்திருந்தனர். டைரக்டர் செல்வ பாரதி இயக்கிய இந்த படத்தில் சினேகாவின் நண்பர்களில் ஒருவராக ஸ்ரீமன் நடித்திருப்பார். இதில் விஜய் மற்றும் ஸ்ரீமன் இடையேயான சீன்கள் ரசிக்கும் படி அமைக்கப்பட்டிருக்கும்.

sriman shares 20 years back photo with vijay

இந்த காட்சியை நடிக்கும் போது எடுத்த சில சீன்களின் ஃபோட்டோக்களை பகிர்ந்துள்ள ஸ்ரீமன், 20 வருடங்களுக்கு முன் பிரேக் வரைக்கும் இந்த பொஷிசனை மாற்றவே இல்லை. திரும்ப திரும்ப இதை எடுத்துக் கொண்டே இருந்தார்கள். திடீரென டைரக்டர் வந்து பிரேக் என்றார். அப்போது மதியம் ஆகி விட்டது. இந்த சீனை எடுக்க மதியம் வரை ஆகி விட்டது. மறக்க முடியாத நாள் என குறிப்பிட்டுள்ளார்.

வசீகரா படத்தில் விஜய், சினேகா லீட் ரோலில் நடித்திருப்பார்கள். வடிவேலு, நாசர், மணிவண்ணன், காயத்ரி ஜெயராம் உள்ளிட்டோர் நடித்திருப்பார்கள். இதற்கு முன் விஜய்யின் மாஸ்டர் படத்திலும் ஸ்ரீமன் நடித்திருப்பார். சமீபத்தில் மாஸ்டர் ஷுட்டிங்கின் போது விஜய்யுடன் எடுத்துக் கொண்ட ஃபோட்டோவையும் ஸ்ரீமன் பகிர்ந்திருந்தார்.

ஃபிரண்ட்ஸ், வசீகரா, சுக்ரன், போக்கிரி, அழகிய தமிழ் மகன், வில்லு, சுரா, பைரவா உள்ளிட்ட விஜய் படங்களிலும் ஸ்ரீமன் நடித்திருப்பார்.

ஸ்ரீமன் வெளியிட்ட 20 வருடங்கள் பழைய ஃபோட்டோவையும் விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். பீஸ்ட் படத்தின் அப்டேட்டிற்காக காத்திருந்த ரசிகர்களுக்கு இது வித்தியாசமான ட்ரீட்டாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X