twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினி... தெரிந்த, தெரியாத சில சுவாரசியங்கள்!

    By Manjula
    |

    சென்னை: தமிழ் சினிமாவில் நாற்பது வருடங்களாக தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் ரஜினிகாந்த், தனது நடிப்பால் உலக அளவில் ஏராளமான ரசிகர்களைக் கொண்டவராகத் திகழ்கிறார்.

    இப்பொழுதும் ரஜினி ஒரு படம் நடிக்கிறார் என்றால் அந்த செய்திதான் கோடம்பாக்கத்தின் அடுத்த சில நாட்களுக்கு தலைப்பு செய்தி, சூப்பர்ஸ்டார் என்ற பெயருக்கு ஏற்றவாறு பல சூப்பர் படங்களில் நடித்தவர்.

    ஆசிய அளவில் அதிக சம்பளம் பெறும் நடிகர்களில் ரஜினியும் ஒருவர், இந்தியாவைத் தாண்டி ஜப்பானிலும் கொரியாவிலும் ரஜினியின் படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. வேறு எந்த நடிகரின் படங்களுக்கும் இல்லாத வரவேற்பு ரஜினியின் படங்களுக்கு இன்றளவும் உள்ளது.

    அமெரிக்காவிலும், பிரிட்டனிலும், தென்கிழக்காசிய நாடுகளிலும் அன்றும் இன்றும் ரஜினியின் படங்கள்தான்வசூலில் முதலிடத்தில் உள்ளன

    உலக அளவில் ரஜினியின் பல படங்கள் இன்றளவும் விரும்பிப் பார்க்கும் படங்களாக இருக்கின்றன, தமிழ் சினிமாவின் ஸ்டைல் மன்னனாக விளங்கும் நடிகர் ரஜினிகாந்த் பற்றி சில சுவாரசியமான தகவல்கள்.

    பிறப்பும், படிப்பும்

    பிறப்பும், படிப்பும்

    சிவாஜிராவ் கெய்க்வாட் என்பது ரஜினியின் சொந்தப் பெயர். 1950 ம் வருடம் டிசம்பர் மாதம் 12 ம் தேதி இரவு 11 மணி 54 க்கு மகர ராசி, திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர். பெங்களூர் கோவிபுரம் அரசு கன்னடப் பள்ளியில் ஆரம்பப் படிப்பையும், ஆச்சார்யா பாடசாலா பள்ளியில் மேற்படிப்பையும் படித்தவர். பள்ளியில் படிக்கும்போதே நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் பள்ளி நாடகங்களில் நடித்து பாராட்டுகளை வாங்கியுள்ளார்.

    முதல் வேலை

    முதல் வேலை

    பியுசி முடித்து விட்டு கார்பெண்டர் வேலை, கூலி வேலைகளை ஆரம்ப நாட்களில் செய்திருக்கிறார். அதற்குப் பின் பெங்களூர் போக்குவரத்துக் கழகத்தில் வேலை பார்த்தார். கண்டக்டர் வேலையை விட்டுவிட்டு சென்னைக்கு வரும்முன்பு நண்பர்கள் முன்னிலையில் கதறி அழுதிருக்கிறார்.

    திரையில் பேசிய முதல் வசனம்

    திரையில் பேசிய முதல் வசனம்

    சென்னை திரைப்படக் கல்லூரியில் படிக்கும் போது தனிமை விரும்பியாக இருந்த ரஜினிகாந்த் அறிமுகமான முதல் திரைப்படம் அபூர்வ ராகங்கள் பேசிய முதல் வசனம் " பைரவி வீடு இதுதானே ".

    மிகவும் பிடித்த விஷயங்கள்

    மிகவும் பிடித்த விஷயங்கள்

    ரஜினிக்குப் பிடித்தவை என்று பார்த்தால்... எல்லாமே எளிமையானவைகளாக இருக்கும். கையேந்தி பவனில் சாப்பிடுவது, வெள்ளை நிறத்தில் ஆன குர்தா அணிவது, கருப்பு நிறம், உலகிலேயே பிடித்த நகரம் சென்னை , படித்ததில் பிடித்தது ரமணரின் எல்லா புத்தகங்களும், ஓய்வெடுப்பதற்கு பிடித்தமான இடம் இமயமலை, கவிஞர்களில் மிகவும் பிடித்தவர் கண்ணதாசன், இசையமைப்பாளர்களில் இளையராஜா, பிடித்த படம் வீர கேசரி (கன்னடம்), மிகவும் பிடித்த வரலாற்று நாவல் பொன்னியின் செல்வன், பிடித்த அரசியல் தலைவர் சமீபத்தில் மறைந்த சிங்கப்பூர் அதிபர் லீகுவான் - யூ இதைத் தவிர செல்ப் டிரைவிங்கும் மிகவும் பிடித்தமானது தான். இன்றும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் செல்ப் ட்ரைவிங்தான்.

    திரையுலகில் மிகவும் பிடித்த, மதிக்கும் நபர்கள்

    திரையுலகில் மிகவும் பிடித்த, மதிக்கும் நபர்கள்

    திரையுலகில் மிகவும் பிடித்த ஒரே நடிகர் கமலஹாசன், பிடித்த நடிகை ரேகா (பாலிவுட்). திரையுலகில் நெருக்கமான தோழி ஸ்ரீபிரியா, இவருடன் மட்டும் தொடர்ந்து 28 படங்களில் நடித்துள்ளார். திரையுலகில் அண்ணன் என்று ரஜினி அழைக்கும் ஒரே நபர் எஸ்.பி.முத்துராமன் மட்டுமே.

    ஆட்டோகிராப் வாங்கிய ஒரே நபர்

    ஆட்டோகிராப் வாங்கிய ஒரே நபர்

    ரஜினியின் ஆட்டோகிராப் கேட்டு பல ரசிகர்கள் தவம் இருக்கும்போது ரஜினியே ஒரு நபரிடம் ஆட்டோகிராப் வாங்கியிருக்கிறார், அவர் கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமார். அவரைத் தவிர வேறு யாரிடமும் இதுவரை ஆட்டோகிராப் வாங்கியதில்லை.

    தங்கச் சங்கிலி

    தங்கச் சங்கிலி

    தனது பாடல் வரிகளுக்காக பலமுறை ரஜினியிடம் தங்கச் சங்கிலியைப் பரிசாகப் பெற்றிருக்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து.

    அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தைகள்

    அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தைகள்

    குட் மற்றும் பைன், பென்டாஸ்டிக் போன்ற வார்த்தைகள் அடிக்கடி ரஜினியின் பேச்சில் இடம்பெறும்.

    நன்கொடை

    நன்கொடை

    திருவண்ணாமலை கோவிலின் கிரிவலப் பாதையில் 148 இடங்களில் சோடியம் மின் விளக்குகள் பொருத்துவதற்காக ரூபாய் 10 லட்சம் நன்கொடை அளித்துள்ளார். அதற்குப் பின்பு தான் கிரிவலத்துக்கு பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

    வீட்டில் கடைப்பிடிக்கும் பக்தி பழக்கங்கள்

    வீட்டில் கடைப்பிடிக்கும் பக்தி பழக்கங்கள்

    வீட்டு பூஜையறையில் காலையில் சுப்ரபாதம் ஒலிக்கும், பின்பு எப்போதும் ஒலிக்கும் மந்திரம் ஓம். குளித்து முடித்ததும் ஈரத் துண்டுடன் பூஜையறையில் தியானம் செய்வார் ரஜினி. வீட்டிற்கு தன்னைச் சந்திக்க வருபவர்களை எழுந்து நின்று வரவேற்பார். அவர்களை வழியனுப்பும்போது ராகவேந்திரரின் படத்தை பரிசாக அளிக்கும் வழக்கம் உண்டு. இதற்காகவே 1௦௦௦ க்கும் மேற்பட்ட ராகவேந்திரர் படங்களை வீட்டில் வாங்கி வைத்துள்ளார். ரஜினி பூசிக் கொள்ளும் திருநீறு இமயமலையில் இருந்து கொண்டு வரப்படுகிறது.

    உணவுப் பழக்கம்

    உணவுப் பழக்கம்

    தீவிர அசைவப் பிரியரான ரஜினி, சைவத்திற்கு மாறும் முன்பு ஆட்டுக் குடல் வறுவலை மிகவும் விரும்பி சாப்பிடுவார். பின்னர் சைவத்திற்கு மாறிய பின் இமயமலையில் ஒரு ரிஷி சொன்ன அறிவுரையின்படி பால், நெய், அரிசி சாதம், தயிர் மற்றும் தேங்காய் உள்ளிட்ட உணவுப் பொருட்களைத் தனது உணவில் இருந்து முற்றிலும் ஒதுக்கி விட்டார். மதிய சாப்பாட்டிற்குப் பின் ஒரு பச்சை வாழைப்பழம் தவறாமல் சாப்பிடுவார்.

    தொடர்ந்து 60 மணி நேரம்

    தொடர்ந்து 60 மணி நேரம்

    தர்மதுரை திரைப்படத்தில் நடித்தபோது தீபாவளி ரிலீஸ் தள்ளிப் போய்விடக்கூடாது என்பதற்காக தொடர்ந்து 60 மணி நேரம் நடித்துக் கொடுத்திருக்கிறார்.

    பிடித்த வாசகங்கள்

    பிடித்த வாசகங்கள்

    தனது 'பிருந்தாவனம்' வீட்டு முகப்பில் "வாய்மையே வெல்லும்" என்று பொரித்து வைத்திருக்கிறார். கடவுள் நல்லவர்களைக் காப்பாற்றுவான் அதற்காக நாம் சும்மா இருந்து விடக்கூடாது, உண்மையாக உழைக்க வேண்டும் என்ற வாசகத்தை மிகவும் நம்புபவர்.

    English summary
    Rajinikanth was born on December 12 1950 in Karnataka, India. He was the fourth child to his parents Ramabai and Ramoji Rao Gaekwad. His original name was Shivaji Rao Gaekwad. He lost his mother at the age of five. He had his schooling at the Acharya Patasala in Bangalore and then at the Vivekananda Balak Sangh, a unit of the Ramakrishna Mission. His mother tongue is Marathi, though he has not done any movie in it. Before starting his career in the film industry, he had to take up all sorts of odd jobs. He served as a bus conductor for Karnataka state transport corporation in Bangalore. It was during this time that he nurtured his acting interests by performing in various stage plays.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X