»   »  யாதும்... சூர்யா தொடங்கும் புதிய மாத இதழ்!

யாதும்... சூர்யா தொடங்கும் புதிய மாத இதழ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

யாதும் என்கிற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மாத இதழ் தொடங்குகிறார் நடிகர் சூர்யா.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மதிப்புக்குரியவர்களுக்கு, 'யாதும் ஊரேவின்' பசுமை வணக்கங்கள்...

Surya to launch new magazine Yaadhum

மாமழையில் மனிதம் துளிர்த்தது. சமீபத்திய மழை வெள்ளம், சுற்றுச் சூழல் குறித்த அக்கறையை, ஒரு மாற்றத்தை நமக்குள் கொண்டு வந்துள்ளது. தன்னெழுச்சியாக ஏராளமான தன்னார்வலர்கள் மீட்பு பணிகளில் இறங்கினார்கள். அத்தகைய தன்னார்வலர்களை ஒருங்கிணைக்கும் வகையில், அகரம் ஃபவுண்டேசன் உருவாக்கிய 'யாதும் ஊரே' திட்டத்துக்கு நல்ல பலன் கிடைத்தது. இந்த அமைப்பின் மூலம், சுற்றுச்சூழல் மீது அக்கறையுள்ள அனைவரும் இணைந்து, தமிழகத்தில் ஒரு புதிய மாற்றத்தை உருவாக்கவேண்டும். அதற்கான திட்டங்களும், செயல்பாடுகளும் தொடர்ந்து நடந்துகொண்டிருகின்றன.

ஒத்த கருத்துள்ள அனைவரையும் ஒன்றிணைக்கவும், பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், 'யாதும்' எனும் மாத இதழ் ஒன்றை வெளியிட திட்டமிட்டுளோம். கருத்து மாற்றத்தை அனைவரிடமும் விதைப்பதே 'யாதும்' மாத இதழின் முதன்மையான நோக்கம். சுற்றுச்சூழலில் அக்கறையுள்ள நிகழ்வுகள் பற்றியும், நபர்கள் பற்றியும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தாலும், தமிழ் மொழியில், முழுமையான சுற்றுச்சூழல் அக்கறையோடு இயங்கும் இதழாக 'யாதும்' அமையும்.

'யாதும்' இதழின் முதல் பிரதியை, வரும் 28 ஏப்ரல் 2016 அன்று வெளியிடுகிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மாத இதழின் தொடக்க விழா சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் ஏப்ரல் 28 அன்று மாலை 6 மணிக்கு நடக்கிறது.

Read more about: surya, சூர்யா
English summary
Actor Surya will be launching a new monthly magazine titled Yaadhum, Tomorrow.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil