»   »  கமல் ஹாஸனின் விக்ரம் படத்தை ரீமேக் செய்கிறார் சூர்யா!

கமல் ஹாஸனின் விக்ரம் படத்தை ரீமேக் செய்கிறார் சூர்யா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கமல் ஹாஸனின் ஒரு கோடிக் கனவு என்ற கேப்ஷனுடன் 1986-ஆம் ஆண்டு வெளியான பிரமாண்ட படம் விக்ரம். அமரர் சுஜாதாவின் கதை, திரைக்கதை, வசனத்தில் உருவான படம்.

படு விறுவிறுப்பாகவும், பக்கா கமர்ஷியலாகவும், இளையராஜாவின் அருமையான பாடல்களுடனும் வந்த இந்தப் படத்தை மறைந்த ராஜசேகர் இயக்கியிருந்தார். கமலுடன் அம்பிகா, டிம்பிள் கபாடியா, லிசி, மறைந்த அம்ஜத் கான் ஆகியோர் நடித்திருந்தனர்.

வெற்றி பெறவில்லை

வெற்றி பெறவில்லை

இந்தப் படம் அன்றைக்கு வெகு பிரபலமாக இருந்த போதிலும், எதிர்ப்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதில் கமலுக்கு மிகப் பெரிய வருத்தம் உண்டு.

கமலின் ஆசை

கமலின் ஆசை

இந்தப் படத்தை இன்னும் நல்ல தொழில்நுட்ப உதவியுடன் பெரிய அளவில் எடுக்க வேண்டும் என்பது அவர் ஆசை. ஆனால் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது அவர் கேரியரில். வேறு வேறு முயற்சிகளில் அவர் பிஸியாக உள்ளார்.

சூர்யா விருப்பம்

சூர்யா விருப்பம்

இப்போது ‘விக்ரம்' படத்தை ரீமேக் செய்ய முயற்சிகள் நடக்கின்றன. சூர்யா இதில் நடிக்கப் போகிறாராம். கமலஹாசனின் ‘விக்ரம்' படத்தை ரீமேக் செய்ய விரும்புகிறேன் என்று சூர்யாவே அறிவித்திருந்தது நினைவிருக்கலாம்.

கமல் அனுமதி

கமல் அனுமதி

இதற்கான அனுமதியை கமலிடம் அவர் பெற்றுவிட்டார் என்று கூப்படுகிறது. மாஸ், 24 படங்களின் வெளியீட்டுக்குப் பிறகு இந்த விக்ரம் ரீமேக் தொடங்கும் எனத் தெரிகிறது.

English summary
Actor Surya is showing much eager to remake the 86' Kamal starrer 'Vikram' movie.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil