தொடர்ந்து புகழேணியில் சூர்யா... மகுடத்தை வெற்றிக் கொண்ட சூரரை போற்று படம்!

சென்னை : நடிகர் சூர்யா தொடர்ந்து தனது வெற்றிகளை குவித்து வருகிறார். இதுகுறித்து அவரது ரசிகர்கள் தொடர்ந்து உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Recommended Video

The Most Tweeted Actors in South Indian Entertainment in 2021| Filmibeat

அவரது ஜெய்பீம் படம் சமீபத்தில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

அவரது முந்தைய படமாக சூரரை போற்று படமும் வசூல்ரீதியாக மட்டுமின்றி பல்வேறு சாதனைகளை தொடர்ந்து செய்து வருகிறது.

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா தொடர்ந்து சிறப்பான பல படங்களில் நடித்து வருகிறார். அவரது முந்தைய படமான சூரரை போற்று சிறப்பாக அவருக்கு கைக்கோடுத்தது. சுதா கொங்குரா இயக்கத்தில் இந்தப் படம் சூர்யாவின் பெஸ்ட் படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.

ஜெய் பீம் படம்

ஜெய் பீம் படம்

தொடர்ந்து அவரது நடிப்பு மற்றும் தயாரிப்பில் கடந்த தீபாவளியையொட்டி அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியானது ஜெய் பீம். இந்தப் படம் உலகளவில் சிறப்பான படமாக ஐஎம்டிபியில் முதலிடத்தை பெற்றிருந்தது. 9.6 புள்ளிகளை பெற்று இந்த இடத்தில் அமர்ந்தது ஜெய்பீம்.

வழக்கறிஞராக சூர்யா

வழக்கறிஞராக சூர்யா

இந்தப் படத்தில் முதல்முறையாக வழக்கறிஞராக நடித்திருந்தார் சூர்யா. பாதிக்கப்பட்ட பழங்குடியினருக்காக குரல் கொடுக்கும் கதாபாத்திரம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது. இந்தப் படம் விமர்சன ரீதியாக சிறப்பாக அமைந்திருந்தது. பல்வேறு தரப்பினரும் மூத்த நடிகர்களும் பாராட்டி தள்ளியுள்ளனர்.

பிப்ரவரியில் எதற்கும் துணிந்தவன் ரிலீஸ்

பிப்ரவரியில் எதற்கும் துணிந்தவன் ரிலீஸ்

இந்நிலையில் அடுத்ததாக எதற்கும் துணிந்தவன் படம் வரும் பிப்ரவரியில் ரிலீசாக உள்ளது. பாண்டிராஜ் இயக்கத்தில் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளனர். கிராமத்து கெட்டப்பில் இந்தப் படத்தில் சூர்யாவை பார்க்க முடிகிறது. டீசர் உள்ளிட்டவை வெளியாகி வரவேற்பை பெற்று வருகின்றன.

சூரரைப் போற்று படத்திற்கு சிறப்பு

சூரரைப் போற்று படத்திற்கு சிறப்பு

இதனிடையே, சூர்யாவின் முந்தைய படமான சூரரைப் போற்று படத்திற்கு தற்போது மேலும் ஒரு மகுடம் கிடைத்துள்ளது. இந்தப் படம் மெல்போர்னில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில் சிறந்த இந்திய படத்திற்கான விருதை பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X