»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னைக்கும் மழைக்கும் ஒத்தே வராது போலிருக்கிறது.

கெளதம் இயக்கத்தில் சூர்யா நடித்து வந்த சென்னையில் ஒரு மழைக்காலம் ப்ராஜெக்டே கைவிடப்பட்டுவிட்டதாம்.

படப்பிடிப்பைத் தொடங்காமல் கெளதம் இழுத்தடித்ததால் அதிலிருந்து சூர்யா விலகிவிட்டதாக சொல்கிறார்கள். இதையடுத்து பாலாதயாரிப்பில் ராம் சத்யா இயக்கப் போகும் படத்தில் நடிக்கப் போகிறார் சூர்யா.

காக்க.. காக்க இமாலய வெற்றிக்குப் பின் மீண்டும் இணைந்தனர் சூர்யாவும் டைரக்டர் கெளதமும். இதற்காக அவர் கேட்ட கால்ஷீட்டைமொத்தமாக அள்ளித் தந்தார் சூர்யா. சென்னையில் ஒரு மழைக்காலம் என்ற பெயரில் படத்தை ஆரம்பித்த கெளதம் அதை பாதியில்விட்டுவிட்டு தெலுங்கில் காக்க.. காக்கவை எடுக்கப் போய்விட்டார்.

திரும்பி வரும் வரை ஜிம்முக்குப் போய் உடம்பை ட்ரிம் ஆக்கிக் கொள்ளுங்கள். கதைக்கு அது அவசியம் என்று கூறிவிட்டுப் போனார்கெளதம். அதை நம்பி ஒய்.எம்.சி.ஏ. ஜிம்மிலேயே பெரும்பாலான நேரத்தைக் கழித்துக் கொண்டிருந்தார் சூர்யா.

தெலுங்கு படம் முடித்து கெளதம் வர 4 மாதம் ஆகிவிட சூர்யாவின் மாதக்கணக்கான கால்ஷீட் வேஸ்ட் ஆகியிருந்தது. ஆனாலும் காக்க..காக்க மூலம் தனக்கு மிகப் பெரிய இமேஜ் தந்த டைரக்டர் என்பதால் பொறுமை காத்தார் சூர்யா.

ஆனால், திரும்பி வந்தும் படப்பிடிப்பை தொடங்கவில்லை கெளதம். இருந்தாலும் எரிச்சலை வெளிக் காட்டிக் கொள்ளாமல் பேரழகனில்நடிக்கப் போனார் சூர்யா. அதை முடித்துவிட்டு வந்தவுடன் மீண்டும் சென்னையில் ஒரு மழைக்காலத்துக்காக மொத்தமாக டேட்ஸ் தந்தார்.

இதையடுத்து சூர்யா- ஆசினை வைத்து முதல் ஷெட்யூல் சூட்டிங்கை ஆரம்பித்தார் கெளதம். மிகுந்த நம்பிக்கையுடன் சூட்டிங்தொடங்கப்பட தீபாவளிக்கு படம் ரிலீஸ் என்று மகிழ்ச்சியுடன் கூறிக் கொண்டிருந்தார் சூர்யா.

ஆனால், திடீரென கதையில் கொஞ்சம் மாற்றம் செய்துவிட்டு மீண்டும் சூட்டிங்கைத் தொடங்குவோமே என்று சொல்லிவிட்டுபடப்பிடிப்பை நிறுத்திவிட்டார் கெளதம்.

சூர்யாவும் பொறுமையாக காத்துக் கொண்டே இருந்தார். மீண்டும் 2 மாதம் வேஸ்ட் ஆனது தான் மிச்சம். இதற்கிடையே காக்க.. காக்கவைஇந்தியில் இயக்கும் வாய்ப்பு வந்துவிட அதில் பிஸியாகிவிட்டாராம் கெளதம்.

இதனால், நொந்து போன சூர்யா அந்த ப்ராஜெக்டில் இருந்தே விலகிவிட்டார் என்கிறார்கள்.

மழைக்காலத்துக்கு தந்த கால்ஷீட்டை, அப்படியே மாற்றி கலைப்புலி எஸ். தாணு தயாரிக்க பாலா இயக்க இருந்த படத்துக்குத் தந்தார்சூர்யா. ஆனால் மழைக்காலத்தை முடித்துவிட்டுத் தான் சூர்யா வருவார் என்று எண்ணியிருந்த தாணுவும், பாலாவும் அதற்குள் தங்களது பிறபடங்களை ஆரம்பித்துவிட்டனர்.

(தாணு தொட்டி ஜெயா படத்தில் பணத்தைக் கொட்டிக் கொண்டிருக்கிறார். அஜீத்தை வைத்து ஏ.எம்.ரத்னம் தயாரிக்கப் போகும் படத்தைஇயக்குவதில் பாலா பிஸி).

இதனால் படப்பிடிப்பைத் தொடங்க கொஞ்சம் டைம் எடுக்கும் என்று தாணுவும், பாலாவும் சொல்லிவிட சூர்யா மீண்டும் அப்ஸெட். சூர்யாவின் தொடர்ந்து மனம் கஷ்டப்படுவதை உணர்ந்த ஜோதிகா, படத்தை தானே தயாரிக்க முன் வந்தார். இதை அறிந்த தாணு, பாலாவைஅழைத்து நீங்களே படத்தை தயாரியுங்கள் என்றாராம்.

பாலா தயங்க, பணத்துக்கு நான் இருக்கேன். பார்த்துக்குவோம், சூர்யாவுக்காக தைரியமா இறங்குங்க என்று ஊக்கம் தந்தாராம் தாணு.இதையடுத்து தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார் பாலா.

படத்துக்கு மாயாவி என்று பெயர் சூட்டியுள்ள பாலா, இதை இயக்கும் பொறுப்பை தனது அஸிஸ்டெண்ட் ராம் சத்யாவிடம்ஒப்படைத்துவிட்டார்.

அர்ஜூனுடன் மணிகண்டா படத்தை முடித்துவிட்டு ஜோதிகாவே இதில் ஹீரோயினாக நடிக்கப் போகிறாராம்.

பி ஸ்டுடியோ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ள பாலா, வருடத்துக்கு 2 படங்களைத் தயாரிக்கப் போகிறாராம்.

பாலாவுக்கும் தாணுவுக்கும் பல வருடப் பழக்கம் உண்டு. பாலு மகேந்திராவை வைத்து மறுபடியும் என்ற படத்தைத் தயாரித்தபோதுஅவரிடம் ஜூனியராக இருந்த பாலாவின் சுறுசுறுப்பு, திறமையை அடையாளம் கண்டுகொண்டவர் தாணு. பாலாவுக்கு முதன்முதலாகசினிமாவில் சம்பளம் கொடுத்தவரே தாணு தான். சிரமத்தில் இருந்த பாலாவுக்கு, மறுபடியும் படத்துக்காக ரூ. 65,000 ஊதியம் தந்தாராம் தாணு. அதே போல பாலாவுக்கு ஆரம்பத்தில்இருந்தே ஆறுதலாக இருந்த இன்னொருவர் சூர்யாவின் தந்தை சிவக்குமார்.

பி.கு: தாணு தயாரிக்க கெளதம் தெலுங்கில் எடுத்த கர்ஷனா படம் தோல்வியடைந்துவிட்டது. வெங்கடேஷ் நடிக்க, காக்க..காக்கவின்ரீமேக்கான அந்தப் படத்துக்கு ஓப்பனிங் நன்றாக இருந்தது. ஆனால், இரண்டாவது வாரத்திலேயே கலெக்ஷன் சரிந்துவிட, படத்தைதூக்கிவிட்டார்கள்.

அதே நிலை தான் ஆட்டோகிராப் படத்தின் ரீ-மேக்கான நா ஆட்டோகிராப் படத்துக்கும் ஏற்பட்டுள்ளது.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil