»   »  நான் சஸ்பெண்டா?: விஷால் மாதிரியே பேசும் நாட்டாமை சரத்குமார்

நான் சஸ்பெண்டா?: விஷால் மாதிரியே பேசும் நாட்டாமை சரத்குமார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து தனக்கு முறையாக கடிதம் எதுவும் வரவில்லை என்று நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்க தலைவராக இருந்தபோது சரத்குமார் ஊழல் செய்ததாக சங்கத்தின் செயலாளர் விஷால் பதவி ஏற்ற நாளில் இருந்து கூறி வருகிறார். மேலும் இது தொடர்பான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அதை வெளியிடப் போவதாகவும் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் உள்ளிட்டோரை சங்கத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்வதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது.

சரத்குமார்

சரத்குமார்

தான் நடிகர் சங்கத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதை ஊடகங்கள் மூலம் தெரிந்து கொண்டதாகவும், இது தொடர்பாக தனக்கு கடிதம் எதுவும் வரவில்லை என்றும் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

ஊழலா?

ஊழலா?

என் மீதான ஊழல் புகார் தொடர்பாக நீதிமன்றத்தில் நிரூபிக்க நான் தயாராக உள்ளேன். நான் செய்த குற்றத்தை பற்றி கூறாமல் தொகையை மட்டும் கூறி என் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்துவது வேதனையாக உள்ளது என்கிறார் சரத்.

விளக்குகிறேன்

விளக்குகிறேன்

விரைவில் நடக்க உள்ள நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளித்து நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன் என சரத் கூறியுள்ளார்.

விஷால்

விஷால்

தயாரிப்பாளர் சங்கத்தை அவதூறாக பேசிய விஷால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால் விஷாலோ இது குறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து தனக்கு கடிதம் வரவில்லை என்றும், மன்னிப்பு கேட்க முடியாது என்றும் கூறினார். தற்போது சரத்தும் தனக்கு கடிதம் வரவில்லை என்கிறார்.

English summary
Actor Sarath Kumar said that he has not received any letter from Nadigar Sangam about his suspension.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil