தளபதி 66 அடுத்த ஹாட் அப்டேட்... விஜய்க்கு ஜோடி யாருன்னு தெரியுமா ?

சென்னை : விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. தற்போது பீஸ்ட் படத்தின் ஷுட்டிங் டெல்லியில் நடந்து வருகிறது.

விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு பீஸ்ட் படத்தின் டைட்டில், ஃபஸ்ட் மற்றும் செகண்ட் லுக்குகள் வெளியிடப்பட்டன. அதற்கு பிறகு படத்தின் ஃபஸ்ட் சிங்கிள், டீசர் போன்ற எதுவும் வெளியிடப்படவில்லை. பீஸ்ட் படத்தின் அடுத்த அப்டேட்கள் முடிவதற்குள் அடுத்த படமான தளபதி 66 படம் பற்றிய அப்டேட்கள் வந்து கொண்டிருக்கிறது.

தளபதி 66 அறிவிப்பு

தளபதி 66 அறிவிப்பு

சமீபத்தில் விஜய்யின் தளபதி 66 படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. தளபதி 66 படத்தை தெலுங்கு டைரக்டரான வம்சி பைடிபள்ளி இயக்க போவதாகவும், தயாரிப்பாளர் தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்க உள்ளது. இந்த படத்திற்கு தமன் இசையமைக்க போவதாக கூறப்படுகிறது. விரைவில் படத்தின் டைட்டிலுடன், படக்குழுவினர் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

நிறைவேற போகும் ஆசை

நிறைவேற போகும் ஆசை

தளபதி 66 அறிவிப்பை வெளியிட்ட கையோடு திருப்பதி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர் வம்சியும், தில் ராஜுவும். பிறகு பேசிய வம்சி, விஜய்யை இயக்க வேண்டும் என்பது தனது நீண்ட நாள் ஆசை என தெரிவித்துள்ளார். இதே போல் விஜய் படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்பது தமன் படத்தின் நீண்டநாள் கனவாம். இவர்கள் இருவரின் ஆசையும் தளபதி 66 படத்தின் மூலம் நிறைவேற போகிறதாம்.

தோழா படத்தை இயக்கியவர்

தோழா படத்தை இயக்கியவர்

இதனால் கோலிவுட்டில் தற்போது தளபதி 66 பற்றிய பேச்சாக உள்ளது. வம்சி தெலுங்கு டைரக்டராக இருந்தாலும், தமிழில் ஏற்கனவே அறிமுகமானவர் தான். கார்த்தி, நாகர்ஜுனா, தமன்னா முக்கிய ரோல்களில் நடித்த தோழா படத்தை இயக்கியது வம்சி தான். இதே படத்தை தெலுங்கிலும் அவர் டைரக்ட் செய்தார். இரு மொழிகளிலும் இந்த படம் செம ஹிட் ஆனது. இந்நிலையில் அடுத்தபடியாக டாப் ஹீரோவான விஜய்யை இயக்க போகிறார்.

மூன்று ஹீரோயின்களிடம் பேச்சு

மூன்று ஹீரோயின்களிடம் பேச்சு

லேட்டஸ்ட் தகவலாக தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க இந்தியாவின் பல்வேறு மொழிகளைச் சேர்ந்த மூன்று டாப் ஹீரோயின்களிடம் பேசப்பட்டு வருகிறதாம். கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா, கியாரா அத்வானி ஆகியோரிடம் தான் பேசப்பட்டு வருகிறதாம். இந்த படத்தில் நடிக்க இரண்டு நாட்களுக்கு முன் தயாரிப்பாளர், ராஷ்மிகா மந்தனாவிடம் பேசி உள்ளாராம். இவர்களில் யார் விஜய்யுடன் ஜோடி சேர போகும் வாய்ப்பை பெற போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Recommended Video

Sunny Leone படத்துல நடிக்கிறேன் | Cooku With Comali Dharsha Gupta Exclusive | Filmibeat Tamil
யாருக்கு கிடைக்கும் வாய்ப்பு

யாருக்கு கிடைக்கும் வாய்ப்பு

கீர்த்தி சுரேஷ் ஏற்கனவே விஜய் நடித்த சர்க்கார் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். பிளாக்பஸ்டர் படமான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிகா மந்தனாவுடன் பேசப்பட்டு, அது முடியாமல் போனதாம். வெற்றி பெற்ற பல தெலுங்கு படங்களில் நடித்ததால் கியாரா அத்வானியிடம் பேசப்பட்டு வருகிறதாம். ராம் சரணை வைத்து ஷங்கர் இயக்கும் ஆர்சி 15 படத்திலும் கியாரா அத்வானி நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X