»   »  ஃபஹத் ஃபாசிலால் அருண் விஜய்க்கு அடித்த ஜாக்பாட்

ஃபஹத் ஃபாசிலால் அருண் விஜய்க்கு அடித்த ஜாக்பாட்

Posted By:
Subscribe to Oneindia Tamil
அருண் விஜய்க்கு அடித்த ஜாக்பாட்

சென்னை: ஃபஹத் ஃபாசிலால் அருண் விஜய்க்கு ஜாக்பாட் அடித்துள்ளது.

மணிரத்னம் இயக்கும் செக்கச் சிவந்த வானம் படப்பிடிப்பு திங்கட்கிழமை துவங்கி நடந்து வருகிறது. படத்தில் விஜய் சேதுபதி, சிம்பு, அரவிந்த்சாமி, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ் ஹைதரி, ஐஸ்வர்யா ராஜேஷ் என்று பெரிய நட்சத்திர பட்டாளமே உள்ளது.

எவ்வளவு பெரிய பட்டாளமாக இருந்தாலும் அவர்களை அழகாக கையாள மணிரத்னத்திற்கு தெரியும்.

வேலைக்காரன்

வேலைக்காரன்

செக்கச் சிவந்த வானம் படத்தில் மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில் தான் நடிப்பதாக இருந்தது. வேலைக்காரன் படம் மூலம் கோலிவுட் வந்த ஃபஹதை தமிழக ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது.

படங்கள்

படங்கள்

ஃபஹத் ஃபாசில் கையில் ஏற்கனவே பல படங்கள் உள்ளதால் அவர் மிகவும் பிசியாக உள்ளார். டேட்ஸ் பிரச்சனையால் அவர் மணிரத்னம் படத்தில் இருந்து விலகினார்.

ஜாக்பாட்

ஜாக்பாட்

ஃபஹத் ஃபாசில் விலகியதை அடுத்து அவர் கதாபாத்திரத்தில் நடிக்க அருண் விஜய் ஒப்பந்தம் ஆகியுள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் நடிப்பதை நினைத்து அருண் விஜய் பெரு மகிழ்ச்சியில் உள்ளார்.

சூப்பர் டீலக்ஸ்

சூப்பர் டீலக்ஸ்

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி திருநங்கை ஷில்பாவாக நடிக்கும் சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஃபஹதும் உள்ளார். அவரை மீண்டும் தமிழ் படத்தில் பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

English summary
Fahadh Faasil has walked out of Mani Ratnam's Chekka Chivantha Vaanam because of dates issue. Arun Vijay has been roped in after that. Arun Vijay is elated to act in Mani Ratnam's movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil