For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சூர்யாவை வலுக்கட்டாயமாக அரசியலுக்கு இழுக்கும் கட்சித் தலைவர்கள்.. நிஜமாக போகிறதா என்ஜிகே?

|
Actor Surya: அரசாங்கம் மேல் கோபத்தை தெரிவித்த நடிகர் சூர்யா

சென்னை: நடிகர் சூர்யாவை அரசியலுக்கு இழுக்கும் முயற்சியில் அரசியல் கட்சித் தலைவர்கள் சிலர் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாக தெரிகிறது.

தான் சம்பாதிக்கும் பணத்தில் இந்த சமூகத்துக்கு ஏதாவது திருப்பி செய்ய வேண்டும் எனும் எண்ணத்தில் கல்வி உதவி, விவசாயப் பணி என பல நல்ல விசயங்களை நடிகர் சூர்யா செய்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்வி கொள்கை குறித்து நடிகர் சூர்யா காட்டமாக விமர்சித்திருந்தார். இந்த புதிய கல்வி கொள்கை அப்படியே அமல்படுத்தப்பட்டால் அரசு பள்ளிகளில் இடைநிற்றல் அதிகரிக்கும் என சூர்யா தெரிவித்திருந்தார்.

கல்வி சம்மந்தப்பட்ட விஷயங்களில் நடிகர் சூர்யாவுக்கு எப்போதுமே ஆர்வம் அதிகம். அவரது அகரம் பவுண்டேஷன் மூலம் நிறைய ஏழை, எளிய மாணவர்கள் கல்வி கற்று வருகிறார்கள். இதனால் சூர்யாவின் இந்த கருத்து அரசியல் அரங்கில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

தமிழிசை கருத்து:

தமிழிசை கருத்து:

"நல்ல எண்ணத்தில் தான் புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு கொண்டுவந்திருக்கிறது. அதைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளாமலேயே சூர்யா கருத்து தெரிவித்திருக்கிறார்", என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எதிர்கருத்து கூறினார்.

எச்.ராஜா எதிர்ப்பு:

எச்.ராஜா எதிர்ப்பு:

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவோ தனது வழக்கமான பாணியில், சூர்யாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதிமுக அமைச்சர்களும் சூர்யாவுக்கு எதிப்பு தெரிவித்திருப்பதால், பிரச்சினை அதிகமாகி இருக்கிறது.

ரசிகர்கள் ஆதரவு:

ரசிகர்கள் ஆதரவு:

அதேசமயம், காங்கிரஸ், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. டிவிட்டரில் ஹேஷ்டேக் போட்டு, சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர் இளைஞர்கள் பலர். இதில் அஜித், விஜய் ரசிகர்களும் அடக்கம். எப்போதும் சமூகவலைதளங்களில் அடித்துக் கொள்ளும் ரசிகர்கள், சூர்யாவுக்காக ஒன்று சேர்ந்துள்ளது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

சூர்யா அமைதி:

சூர்யா அமைதி:

ஆனால் இது எது பற்றியும் வாய்த்திறக்காமல் மவுனமாக இருக்கிறார் சூர்யா. கல்வி துறையில் நிபுணர்களாக உள்ள பலரை கொண்டு தான் அகரம் பவுண்டேஷனை நடத்தி வருகிறார் சூர்யா. எனவே தேசிய கல்விக் கொள்கை குறித்து முழுமையாக தெரிந்துகொள்ளாமல் சூர்யா கருத்து கூறவில்லை என்பது நிதர்சனம்.

வள்ளுவர் வாக்கு:

வள்ளுவர் வாக்கு:

எடுப்பார் இல்லா ஏமரா மன்னன் கேடுப்பார் இலானும் கேடும் என்பது வள்ளுவர் வாக்கு. ஆக அரசின் கொள்கைகளுக்கு எதிராக ஒரு கருத்து முன் வைக்கப்படும் போது, அதில் உள்ள உண்மை தன்மையை ஆராய்ந்து தீர்வு காண்பதே அரசின் முதல் கடமையாகும். அதைவிடுத்து, கருத்துக்கூறிய நபரை ஒடுக்க நினைப்பது அரசின் அறமாகாது.

அரசியல் பிரவேசம்:

அரசியல் பிரவேசம்:

நடிகர்கள் அரசியலுக்கு வருவதை அரசியல் கட்சிகள் விரும்புவதில்லை. அதனால் தான் கமல், ரஜினி, விஜயகாந்த் உள்ளிட்டோருக்கு எதிராக மறைமுகமாகவும், நேரடியாகவும் அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன. அப்படி ஒரு நிகழ்வு தான் கமல்ஹாசனை விஸ்வரூபம் எடுக்க வைத்து, அரசியல் கட்சி தொடங்க வைத்தது. இதேபோல தான் தற்போது சூர்யாவையும் வலுகட்டாயமாக அரசியலுக்கு இழுக்கப் பார்க்கிறார்கள்.

நிஜ என் ஜி கே:

நிஜ என் ஜி கே:

சமீபத்தில் செல்வராகவன் இயக்கத்தில் அவர் நடித்த என் ஜி கே படம் கூட ஏறக்குறைய இதே போன்ற கதை தான். சமுதாயப்பணி செய்யும் இளைஞனை சீண்டி, அவனை அரசியலில் ஈடுபட வைத்து, கடைசியில் அவன் முதல்வர் ஆவது தான் அப்படத்தின் கதைக்களம். நிஜத்திலும் சூர்யா விசயத்தில் அது போல் நடக்காமல் இருக்க, அவரை சீண்டாமல் இருப்பதே அரசியல் கட்சிகளுக்கு நல்லது.

English summary
The present scenario in Tamilnadu clearly shows that some political parties pushing actor Surya into politics in the current nattional educational policy issue.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more