For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  தமிழ்நாட்டு போலீஸ் அடிக்கலையே!… எனக்கு ஃபேன்ஸ் ஆகிட்டாங்களே!!: பவர் ஸ்டார் 'பரவசம்'

  By Mayura Akilan
  |

  புழல், திகார் என்று சுற்றுலா(!) போய்விட்டு சரியாக படம் ரிலீஸ் நேரத்தில் ஜாமீனில் வெளிவந்திருக்கிறார் பவர்ஸ்டார் சீனிவாசன். மீடியா வெளிச்சத்தில் இருந்து கொஞ்சம் தள்ளியிருந்த பவர் மீண்டும் ஊடகச் செய்திகளில் அடிபடுகிறார்.

  நான் யாரையும் ஏமாற்றவில்லை. என்னை பழிவாங்கி விட்டார்கள் என்கிறார் சீனிவாசன். எல்லாரையுமே ஈஸியா நம்பிடுவேன். அதான் என் பலமும் பலவீனமும்!

  சினிமாவிற்காக தன்னுடைய பணத்தை இழந்துவிட்டதாக கூறும் அவர் சிறைவாழ்க்கையைப் பற்றி பிரபல வார இதழுக்கு பேட்டியளித்துள்ளார் படியுங்களேன்.

  நாலு மாசம் ரெஸ்ட்

  நாலு மாசம் ரெஸ்ட்

  ஜெயிலுக்கு போனது நாலு மாசம் ரெஸ்ட் கிடைச்சதுனு நினைச்சுக்கிட்டேன். உள்ளே போனவன்லாம் அக்யூஸ்டும் இல்லை; வெளியில இருக்கிறவன்லாம் யோக்கியனும் இல்லை. குடும்பத்தைப் பிரிஞ்சு இருந்ததுதான் கஷ்டமா இருந்துச்சு. இதுவே இன்னொருத்தனா இருந்தா, இந்நேரம் தற்கொலை பண்ணிட்டு செத்திருப்பான். ஆனா, நான் சமாளிச்சுட்டேன். பாசம்தான் பெரிசுனு நினைச்சேன். பணம்தான் பெரிசுனு உணரவெச்சுட்டாங்க!''

  கடவுள் செயல்

  கடவுள் செயல்

  என்கூட எப்பவும் சுத்திட்டே இருக்கும் பத்து பேர்கூட எனக்கு எதிரியா ஆகிட்டாங்க. என்னை அழிக்கணும்னு கூடவே இருந்து வேலை பார்த்தாங்க. ஆனா, அவங்க எண்ணம் நிறைவேறலை... நிறைவேறாது. நான் வெளில வந்தது நிஜமா கடவுள் செயல்.

  ரூ.20 கோடி

  ரூ.20 கோடி

  சினிமாவுல அறிமுகமாகணும்னு மட்டுமே கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் வரை இழந்தவன் நான். அந்த இயக்குநர்கள் பேரெல்லாம் சொல்ல விரும்பலை. உண்மையிலேயே அதிகம் ஏமாந்தது நான்தான். என்னை ஏமாத்தினவங்களை, கடவுள் பார்த்துப்பார்!''

  ஃபேன்ஸ் ஆகிட்டாங்க

  ஃபேன்ஸ் ஆகிட்டாங்க

  தமிழ்நாட்டு போலீஸ் தங்கமானவங்க. நிறைய அறிவுரை சொன்னாங்க. ஒரு வாரத்துக்கு அப்புறம் எல்லாரும் எனக்கு ஃபேன்ஸ் ஆகிட்டாங்க!''

  எட்டி கூட பார்க்கலை

  எட்டி கூட பார்க்கலை

  ''பிரசாந்த் மட்டும் விசாரிச்சார். மத்தபடி யாருமே என்னாச்சுனுகூட கேட்கலை. யார் யாரையோ 'தம்பி'னு சொன்னேன். அவங்கள்லாம் எட்டிக்கூட பார்க்கலை.

  ஆஸ்பத்திரி போச்சே

  ஆஸ்பத்திரி போச்சே

  எட்டு கோடி முதலீட்டில் நான் கட்டின லத்திகா மருத்துவமனையை நான் கைதானதும் கொள்ளையடிக்கிற மாதிரி லாரி வெச்சு பொருட்களை எல்லாம் சிலர் தூக்கிட்டுப் போயிட்டாங்க. இந்த எல்லாப் பிரச்னைக்கும் ஒரு லேடிதான் காரணம்.

  அடிச்சி நொறுக்குவேன்

  அடிச்சி நொறுக்குவேன்

  இந்த மாசம் மட்டும் நான் நடிச்ச மூணு படங்கள் வருது. இன்னும் நிறையப் படங்கள் புக் ஆகுது. 'ரசிகர்கள் என்னை வெறுக்கணும்... நான் சினிமாவுலயே இருக்கக் கூடாது'னு நினைச்சவங்க எண்ணத்தை அடிச்சு நொறுக்குவான் இந்த பவர்! என்று நம்பிக்கையோடு கூறியுள்ளார் சீனிவாசன்.

  English summary
  Actor cum accused in many caess Power star Srinivasan has said that he has more ardent fans amonng TN police.

  சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more