»   »  ’பெண்’ணாகவே மாறிய தமிழ் ஹீரோக்கள்!

’பெண்’ணாகவே மாறிய தமிழ் ஹீரோக்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரிஸ்க் எடுத்தால்தான் சினிமாவில் நீண்ட காலத்துக்கு ஜொலிக்க முடியும் என்பது தியாகராஜ பாகவத காலத்து உண்மை. ரிஸ்க்குகளிலேயே பெரிய ரிஸ்க் பெண்ணாக ஒரு ஆண் நடிப்பதுதான். மேக்கப், காஸ்ட்யூம், கெட் அப் போன்றவை எல்லாம் அப்புறம் தான். பெண்ணுக்கே உரிய அந்த நாணத்தையும், நளினத்தையும் கொண்டு வருவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல... முக்கியமாக சொந்தக் குரல்... அதை சாதித்துக் காட்டிய தமிழ் ஹீரோக்களின் லிஸ்ட்.

சூப்பர் ஸ்டார் ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினி

பெண் வேடம் போடுவதில் இப்போதிருக்கும் ஹீரோக்களுக்கு மாஸ்டர் நம்ம சூப்பர் ஸ்டார்தான். ஆனால் நீண்ட நேரம் வராமல், மின்னலாய் வந்து கலக்குவார்.

அவர் பெண்வேடம் போட்ட முதல் படம் நான் சிவப்பு மனிதன். வெண்மேகம்... பாடலில் ஒரு நிமிடம் பெண்வேடத்தில் வந்து பாசம் காட்டுவார். அடுத்து பணக்காரன் படத்தில் நூறு வருஷம்... பாடலுக்கு திரையையே அதிர வைப்பார்.

எந்திரன் படத்தில் சிட்டியாக வரும் ரஜினி, ஒரு ரேம்ப் வாக் போவார்.. அசத்தலாக இருக்கும்.

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

இன்னும் மூன்று தினங்களில் தமிழ்நாடே மோகனா பித்து பிடித்து ஆட்டப்போகிறது. ஆமாம், மோகனாவாக பெண் வேடமிட்டு களம் இறங்குகிறார் சிவகார்த்திகேயன். நர்ஸ் வேடத்தில் இருக்கும் படங்களைப் பார்த்தாலே சும்மா ஜிவ்வென்று இருக்கிறது. சிவா பெண் வேடம் போடப்போகிறார் என்றதுமே ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்தன. அவற்றையெல்லாம் அதிகமாக்கியிருக்கிறது இந்த கெட் அப். சிவாவுக்கு ஒரு தங்கை இருந்திருந்தால் இப்படித்தான் இருந்திருப்பார் என்னும் அளவுக்கு மாறியிருக்கிறார். ட்ரெய்லரில் காட்டும் நளினம் படத்திலும் தொடர்ந்தால் போதும். படம் பிளாக்பஸ்டர் என்பது இப்போதே தெரிந்துவிட்டது. கீர்த்தி சுரேஷை விட மோகனாதான் அழகு... ஹிஹி...

விக்ரம்

விக்ரம்

கந்தசாமியிலேயே பெண் வேடமிட்டு நம்மை அசர வைத்துவிட்டார் விக்ரம். ஆனால் இருமுகன் லவ் கேரக்டர் வேற லெவல்... வில்லியாக வந்து சின்ன சின்ன அசைவுகளில் கூட பெண்மை கலந்து தன்னை நிரூபித்தார் விக்ரம். லவ் கேரக்டர் ரொம்பவே லவ்வப்பட்டதாலேயே பெரிய ஹிட் அடித்த்து இருமுகன்.

சந்தானம்

சந்தானம்

ஆல் இன் ஆல் அழகுராஜா கரீனா சோப்ராவை மறக்க முடியுமா? சொக்க வைக்கும் சொக்க வைக்கும் என்று சந்தானம் பாடிய விளம்பர பாடல் செம ஹிட்டு... கரீனாவின் அழகில் மயங்கியது கோட்டா ஸ்ரீனிவாசராவ் மட்டுமல்ல நாமும்தான். படம் பெரிதாக போகாததால் கரீனா சோப்ரா பெரிய பெயர் பெற முடியாமல் போனது சோகமே...

விவேக்

விவேக்

ஏற்கெனவே தில், முரட்டுக்காளை படங்களில் பெண் வேடமிட்டு நடித்திருந்தாலும் விவேக்கின் மாஸ்டர் பீஸ் அந்த குரு என் ஆளு லதா ஆண்ட்டிதான். புதிய பறவை சரோஜாதேவியை இமிடேட் செய்து கோப்ப்பால் என்று எம்.எஸ்.பாஸ்கரைப் பார்த்து சொல்லியபோதெல்லாம் தியேட்டரில் விசில் பறந்தது. என்ன இந்த படமும் பெரிதாக போகாததால் அதே டிட்டோ...

வடிவேலு

வடிவேலு

வடிவேலுதான் போடாத வேஷம் இல்லையே... பல படங்களில் பெண்ணாக வந்திருந்தாலும் வடிவேலுவின் கேரியரில் பெரிய ஹிட் அந்த பாட்டாளி லேடி கெட்டப். அனுமோகனின் தங்கையாக வந்து அசரடித்தார். மணிவண்ணனின் சந்தேகம், கிரேன் மனோகரின் லவ் டார்ச்சர் எல்லாவற்றையும் தனது பாடி லேங்குவேஜால் சமாளித்து நம்மை சிரிக்க வைத்தார். ஆதித்யா, சிரிப்பொலிக்கு இன்னும் கண்டெண்ட் கொடுத்துக்கொண்டிருப்பது இந்த மூன்று கேரக்டர்களும் தான்.

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

சவால்களின் மன்னன் இதை மட்டும் விடுவாரா? அவ்வை சண்முகியாகவும் கிருஷ்ணவேணி பாட்டியாகவும் வந்து தமிழ்நாட்டை மட்டுமல்லாது உலகத்தையே ஆச்சர்யப்படுத்தினார். இன்று இளம் ஹீரோக்கள் இந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்க கமல் தான் ரோல்மாடல். அதிலும் சொந்தக் குரல் வேறு.

சத்யராஜ்

சத்யராஜ்

எந்த கேரக்டர் என்றாலும் அந்த கேரக்டர் ஆகவே மாறிவிடும் புரட்சி தமிழனையும் சில படங்களில் தமிழச்சியாக்கினார்கள். அதில் முக்கியமானது மாமன் மகள். மீனாவை ஏமாற்ற தன்னுடைய அம்மாவாக தானே நடித்து பிச்சு உதறினார்.

பிரசாந்த்

பிரசாந்த்

பெயர் தான் ஆணழகன்.. ஆனால் பெண்ணழகியாக வந்து கவர்ந்தார் பிரசாந்த். பிரசாந்த் வாழ்க்கையில் மறக்க முடியாத கேரக்டர் இதுவாகத்தான் இருக்க முடியும். ஹீரோயினை விட அழகாக வந்து கலக்கினார்.

கவுண்டருக்கு இணை ஏது?

கவுண்டருக்கு இணை ஏது?

இத்தனை பேர் பெண் வேடமிட்டாலும் நம்மை குபுக் என்று சிரிக்க வைத்த பெருமை நம் தலைவன் கவுண்டமணியையே சாரும். நாட்டாமை பட க்ளைமாக்ஸில் கிங்கிச்சா பாயாச்சா என்ற டயலாக்கை நினைவுபடுத்தி பாருங்கள்... அதே தான்...!

English summary
Here is the list of top heroes those appeared in woman getup in their movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil