9 மில்லியன் பார்வையாளர்களை கடந்த நாங்க வேறமாறி…. அஜித் ரசிகர்கள் குஷி!

சென்னை : வலிமை திரைப்படத்தின் 'வேறமாறி' பாடலின் Lyrical வீடியோ புதிய சாதனை படைத்துள்ளதாக போனி கபூர் தனது ட்வீட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்

இணையத்தில் வெளியாகி உள்ள இந்த தகவல் அஜித் ரசிகர்களை மேலும் உச்சமடையச் செய்துள்ளது.

விக்னேஷ் சிவன் எழுதிய இந்த பாடலை,யுவன் சங்கர் ராஜா மற்றும் அனுராக் ஆகியோர் இணைந்து பாடி உள்ளனர்.

இதய நோயால் அவதிப்படும் 3 வயது ஜெசிக்காவிற்கு உதவுங்கள் ப்ளீஸ்

போனி கபூர்

போனி கபூர்

ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில், அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை கடந்த ஆண்டு வெளியாகி பாராட்டுக்களைக் குவித்தது. நேர்கொண்டபார்வை திரைப்படத்தில் வழக்கறிஞரான நடித்திருந்தார் அஜித். மேலும், பெண்கள் உரிமைப்பற்றி பேசும் திரைப்படமாக அமைந்திருந்தது. இப்படத்தில் குறிப்பாக அஜித் பேசிய நோ மீன்ஸ் நோ வசனம் பெண்களை மிகவும் கவர்ந்தது. இருந்தாலும், மாஸ் ஹீரோ அஜித் இப்படி அமைதியாக வந்ததை அஜித் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.

வெற்றிக்கூட்டணி

வெற்றிக்கூட்டணி

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று வெற்றி திரைப்படங்களை ஹெச். வினோத் இயக்கி இருந்தார். நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இந்த வெற்றிக்கூட்டணி மீண்டும் வலிமை திரைப்படத்தில் ஒன்றிணைந்து களத்தில் குதித்துள்ளது.

ஈஸ்வரமூர்த்தி ஐ.பி.எஸ்

ஈஸ்வரமூர்த்தி ஐ.பி.எஸ்

இப்படத்தில், அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். அஜித் இதற்கு முன்பாக மங்காத்தா மற்றும் என்னை அறிந்தால் திரைப்படங்களிலும் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். அதே போல இந்த திரைப்படத்திலும் அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். அவர் கதாபாத்திரத்தின் பெயர் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. இதை அஜித்தின் ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்டாக்கினர்.

ஹூமா குரேஷி

ஹூமா குரேஷி

பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கிறார். இவர் காலா திரைப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்தவர். மேலும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளார். வலிமை படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டன.

அப்டேட் கேட்ட ரசிகர்கள்

அப்டேட் கேட்ட ரசிகர்கள்

வலிமை படம் தொடங்கப்பட்டு ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் ஆனதை அடுத்து வலிமை படம் குறித்த அப்டேட்டை ரசிகர்கள் கேட்டனர். பாரத பிரதமர் சென்னை வந்த போதும், தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போதும், இந்தியா இங்கிலாந்து கிரிக்கெட் போட்டி நடைபெற்ற போதும், யூரோ கால்பந்து போட்டியில் இன்னும் ஒரு படி மேலே சென்று சாமியாரிடமும் வலிமை அப்டேட் கேட்டனர்.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

இந்நிலையில் வலிமை படத்தின் வேறமாதிரி பாட வெளியான சில மணி நேரத்திலேயே 2.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது. இதை படக்குழுவினர் போஸ்டராக வெளியிட்டனர். மேலும், அஜித் சினிமாவில் நடிக்க வந்து 30 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், அதே நாளில் இந்த பாடல் வெளியானதால் அவரின் ரசிகர்கள் இதை வேறமாறி கொண்டாடினர்.

சில மணி நேரத்திலேயே

சில மணி நேரத்திலேயே

இந்நிலையில் வலிமை படத்தின் வேறமாதிரி பாட வெளியான சில மணி நேரத்திலேயே 2.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து. இதை படக்குழுவினர் போஸ்டராக வெளியிட்டனர். மேலும், அஜித் சினிமாவில் நடிக்க வந்து 30 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், அதே நாளில் இந்த பாடல் வெளியானதால் அவரின் ரசிகர்கள் இதை வேறமாறி கொண்டாடினர்.

வாழு வாழவிடு

வாழு வாழவிடு

வலிமை படத்தின் முதல் பாடலான இந்த பாடல், அஜித் எப்போதும் சொல்லும் வார்த்தைகளை வைத்து பாடலை எழுதியுள்ளார் விக்னேஷ் சிவன், குடும்பத்தை பாருங்கள், எண்ணம் போல் வாழ்க்கை, வாழு வாழவிடு என ரசிகர்களுக்கு அறிவுரை கூறுவது போல இந்த பாடல் அமைந்துள்ளது. இப்பாடலை, யுவன்சங்கர் ராஜா மற்றும் அனுராக் குல்கர்னியும் இணைந்து பாடி உள்ளனர். அஜித் ரசிகர்கள் #Valimai, #Naangaveramadhiri, #Ajith, #HVinoth, #Yuvan உள்ளிட்ட ஹேக்டேக்குகளை ட்விட்டர் தளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

9 மில்லியன் பார்வையாளர்கள்

9 மில்லியன் பார்வையாளர்கள்

இந்நிலையில், வலிமை படத்தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஓபனிங் பாடலான நாங்க வேற மாதிரி பாடலை இதுவரை 9 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளதாகவும், டிரெண்டிங்கில் நம்பர் 1 எனவும், இப்பாடலுக்கு 1 மில்லியன் லைக்குகள் வந்துள்ளதாகவும் பதிவிட்டுள்ளார். இந்த செய்தி அஜித் ரசிகர்களை மேலும் குஷியாக்கி உள்ளது.

தீபாவளிக்கு முன்பே

தீபாவளிக்கு முன்பே

வலிமை படத்தின் டீசர் வரும் ஆகஸ்ட் 15ந் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் வலிமை திரைப்படம் தீபாவளிக்கு முன்பே வெளியாகும் என்ற தகவல்களும் வேகமாக பரவி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X