For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சில பேரின் பெயர் தான் ஒரு ஆளுமை பெறுமாமே.. ‘வாரிசு’ விஜய்யின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

  |

  சென்னை: விஜய் - என்பதன் பொருளே வெற்றி தான். கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக பல ஆண்டுகளாக கோலோச்சி வரும் கலையுலக 'வாரிசு' இன்று தனது 48வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

  Thalapathy Vijay | தொடர் வெற்றியில் முன்னணியில் Vijay... *Kollywood | Filmibeat Tamil

  வெற்றியோ, தோல்வியோ பின் வாங்கும் பழக்கமே இல்லாமல் மோதி பார்க்கும் குணம் உடையவர் விஜய். கேஜிஎஃப் 2வுடன் போட்டியாக வெளியான அந்த தில்லே தனி தில் தான் என விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

  'வாரிசு' மூலம் விட்டதை வசூல் செய்ய 'The Boss is Returns' என்று தான் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதில் இருந்து விஜய் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் தங்களின் ஆளுமை செலுத்தி வருகின்றனர்.

  Happy Birthday Vijay...விஜய் பற்றி இதெல்லாம் யாருக்காவது தெரியுமா ? Happy Birthday Vijay...விஜய் பற்றி இதெல்லாம் யாருக்காவது தெரியுமா ?

  48வது பிறந்தநாள்

  48வது பிறந்தநாள்

  "சில பேரின் பெயர் தான் ஒரு ஆளுமை பெறுமாமே" என பீஸ்ட் படத்தில் அனிருத் இசையமைத்த பாடல் 100 சதவீதம் நடிகர் விஜய்க்கு கச்சிதமாக பொருந்தும். 1974ம் ஜூன் 22ம் தேதி இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் சோபா சந்திரசேகருக்கு மகனாக பிறந்தார் விஜய். இன்று அவரது 48வது பிறந்தநாளை அவர் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களே கொண்டாடி வருகின்றனர்.

  அஜித், சூர்யா ரசிகர்கள் வாழ்த்து

  அஜித், சூர்யா ரசிகர்கள் வாழ்த்து

  என்னதான் தொழில் போட்டி காரணமாக நடிகர் விஜய்யை அஜித் ரசிகர்கள், சூர்யா ரசிகர்கள் எதிரிகளாக பார்த்தாலும், பிறந்தநாள் அதுவுமாக எந்தவொரு நெகட்டிவ் டேக்கும் இதுவரை ஆரம்பிக்காமல் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த போக்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்தால், நிச்சயம் அவர்கள் இருவரும் இணைந்து பான் இந்தியா படத்திற்கான முயற்சியில் களம் காணுவார்கள்.

  விஜய் சம்பளம்

  விஜய் சம்பளம்

  பீஸ்ட் படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஜய். இந்த படத்திற்கு அவருக்கு அதிகபட்சமாக 118 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவர்கள் வெளியிடும் அத்தனை அறிவிப்பின் கூட்டுத் தொகை 10 வருவது போலவே பார்த்துக் கொள்வதால் சம்பளமும் 118 கோடி கொடுத்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

  ஆடி முதல் கோஸ்ட் கார் வரை

  ஆடி முதல் கோஸ்ட் கார் வரை

  நடிப்பு மற்றும் நடன திறமையால் உலகளவில் ஏகப்பட்ட ரசிகர்களை குவித்துள்ள நடிகர் விஜய்யிடம் ரூ.6 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு கார், ரூ. 1.30 கோடி மதிப்பிலான ஆடி A8, ரூ.75 லட்சம் மதிப்புள்ள BMW series 5, ரூ. 90 லட்சம் மதிப்புள்ள BMW X6, ரூ. 35 லட்சம் மதிப்புள்ள மினி கூப்பர் உள்ளிட்ட கார்கள் மற்றும் விலையுயர்ந்த சைக்கிள் மற்றும் பைக்குகளும் உள்ளன.

  வருஷத்துக்கு எவ்வளவு

  வருஷத்துக்கு எவ்வளவு

  நடிகர் விஜய்யின் ஆண்டு வருமானம் ரூ. 100 கோடி முதல் ரூ. 120 கோடி வரை உள்ளதாக கடந்த 2019 முதல் கணிக்கப்பட்டுள்ளது. சினிமாவை தவிர சில விளம்பரங்களின் தூதர் என்கிற முறையிலும் நடிகர் விஜய்க்கு ஆண்டுக்கு ரூ. 10 கோடி வரை வருமானம் வருகிறதாம்.

  500 கோடி சொத்து

  500 கோடி சொத்து

  தற்போது தளபதி 66வது படமாக வாரிசு படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஜய். சென்னையில் சாலி கிராமம், நீலாங்கரை மற்றும் பனையூர் உள்ளிட்ட இடங்களில் நடிகர் விஜய்க்கு பங்களாக்கள் உள்ளன. நடிகர் விஜய்யின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 500 கோடியை நெருங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஆண்டு 410 கோடி சொத்து இருந்த நிலையில், பீஸ்ட் மற்றும் வாரிசு படங்களின் சம்பளத்தை சேர்ந்து சொத்து மதிப்பு அதிகரித்துள்ளதாக கூறுகின்றனர்.

  ஒற்றைத் தலைமையே

  ஒற்றைத் தலைமையே

  தமிழ்நாட்டிலேயே கோடிக் கணக்கில் நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் உள்ளனர். மக்கள் மத்தியில் மிகப்பெரிய செல்வாக்கும் இருக்கிறது. ஒவ்வொரு முறை தேர்தல் வரும் போது நடிகர் விஜய்யின் ஆதரவு யாருக்கு இருக்கும் என்கிற எதிர்பார்ப்பும் எழத் தொடங்கி இருக்கிறது. மேலும், விஜய் மக்கள் இயக்கம் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தல்களில் கணிசமான வெற்றியை பெற்று வருகிறது. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு சிஎம் விஜய், ஒற்றைத் தலைமையே என ஏகப்பட்ட போஸ்டர்கள் தமிழ்நாடு முழுவதும் களைகட்டி உள்ளது.

  English summary
  Actor Vijay today celebrated his 48th birthday. The 'Varisu' movie actor Vijay's total networth reaches 500 crores details circulates in closed circles.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X