»   »  ஆங்கிலப்படத்தில் நடிக்கிறார் இளையதளபதி விஜய்?

ஆங்கிலப்படத்தில் நடிக்கிறார் இளையதளபதி விஜய்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஆங்கில படம் ஒன்றில் நடிக்க வைக்க இளையதளபதி விஜயை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அப்சரா ராம்குமார் இயக்கத்தில் ஜாக் மைக்கேல், வித்யா, ஹரிணி மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘ஒண்ணுமே புரியல'.

இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ஏ.ஆர். ரைஹ்னா இசையமைத்துள்ளார். இப்படம் தமிழில் இன்னும் வெளியாகவில்லை.

ஆனால், அதற்கு முன்னரே ஹாலிவுட்டில் ஆங்கிலத்திலும், மற்றும் ஜெர்மன் மொழியிலும் தயாரிப்பதற்காக பிரபல ஜெர்மன் சினிமா நிறுவனமான ‘ஃபென்ச்சல்-ஜானிஷ் பிலிம் புரொடக்ஷன்ஸ் - ஜிபிஆர் உரிமம் பெற்றுள்ளதாம்

‘இது எதிர்பாராத ஒரு மகிழ்ச்சி. எனக்கு மட்டுமின்றி தமிழ்த் திரையுலகத்திற்கே பெருமை சேர்க்க கூடிய ஒரு விஷயமாக இதைக் கருதுகிறேன் என்று படத்தின் இயக்குனர் அப்சரா இராம்குமார் கூறியுள்ளார்.

படத்திற்கு ஆஸ்கர் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ஏ.ஆர். ரைஹ்னா இசை அமைத்துள்ளார். இப்படத்தின் உயிர் நாடி ஏ.ஆர். ரைஹ்னாவின் இசை என்று கூறினார்.

ஹாலிவுட் நிறுவனம்

ஹாலிவுட் நிறுவனம்

‘ஒண்ணுமே புரியல' திரைப்படத்தை கலிபோர்னியாவில் உள்ள பிரபல ஹாலிவுட் திரைப்படக் கம்பெனியுடன் இணைந்து உரிமை பெற்றுள்ள ஜெர்மன் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

ஹாலிவுட் படம்

ஹாலிவுட் படம்

மேற்கு கலாச்சாரத்திற்கு ஏற்றபடி கொஞ்சம் மாற்றி அமைத்து, ஆங்கிலத்தில் எடுக்கப்படும் இப்படம் ஜெர்மன் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு உலகம் முழுவதும் 2016-ஆம் ஆண்டு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் தரப்பில்

விஜய் தரப்பில்

இந்த படத்தில் தென்னிந்தியாவை சேர்ந்த பிரபல நடிகர் ஒருவரை நடிக்க வைக்க படத்தின் தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளார். தற்போது பிரபலமாக உள்ள நடிகர் விஜயை நடிக்க வைப்பதற்காக அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரை அணுகியுள்ளனர்.

புலி

புலி

இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், விஜய் தரப்பில் இருந்து இதுவரை எந்த ஒரு பதிலும் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. விஜய் தற்போது புலி படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

சைக்கலாஜிக்கல் திரில்லர்

சைக்கலாஜிக்கல் திரில்லர்

‘ஒண்ணுமே புரியல' என்கிற திரைப்படம் உலக சினிமாவில் ஒரு புத்தம் புதிய படைப்பு என்றும், இது ஒரு சைக்காலஜிக்கல் திரில்லர் என்றும் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒண்ணுமே புரியல" திரைப்படம் தமிழில் ஓரிரு மாதங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
If sources in the industry are to be believed, a European firm seems to be interested in casting Ilayathalapathy Vijay in the lead role of an English film it intends to make.
Please Wait while comments are loading...