நைட் 2 மணி.. உடை மாற்றிக்கொண்டிருந்த விஜய்?.. கதவை திறக்க முயன்ற நெப்போலியன்.. ஷாக் கொடுத்த பிரபலம்

சென்னை: நடிகர் விஜய்க்கும் நெப்போலியனுக்கும் போக்கிரி பட சமயத்தில் மனஸ்தாபம் ஏற்பட்டது. அப்போதிருந்து அவருடன் சேர்ந்து நடிப்பதையோ, பேசுவதையோ நிறுத்திவிட்டதாக நெப்போலியன் தெரிவித்தார். மேலும் இந்தப் பிரச்னை பற்றி விரிவாக இதுவரை பேசாமல் இருந்துவருகிறார். இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி இதுபற்றி பேசியிருக்கும் விஷயம் ஷாக்கை கொடுத்திருக்கிறது.

கோலிவுட்டின் சீனியர் நடிகரான நெப்போலியன் இப்போது சினிமாவிலிருந்து ஒதுங்கி அமெரிக்காவில் வசித்துவருகிறார். தனது மூத்த மகன் தனுஷுக்கு தசை சிதைவு நோய் வந்ததால் அதற்கான சிகிச்சைக்காக சென்று அங்கேயே செட்டிலாகிவிட்டார். கடந்த சில காலமாகவே அங்கே வசித்துவரும் அவர் தனுஷுக்கு கடந்த வருடம்தான் திருமணம் செய்துவைத்தார். அந்தத் திருமணத்தில் நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.

விஜய்யுடன் பிரச்னை: இதற்கிடையே அவர் திரைத்துறையில் இருந்தபோது விஜய்யோடு போக்கிரி படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தின் ஷூட்டிங்கில் விஜய்யுடன் அவருக்கு மனஸ்தாபம் ஏற்பட்டது. அமெரிக்காவிலிருந்து வந்திருந்த தனது நண்பர்கள் விஜய்யை சந்திக்க ஆசைப்பட்டதாகவும்; அதற்காக கேரவனுக்கு அழைத்து சென்றபோது விஜய் கேரவனுக்கு வெளியே வைத்து ஒரு மாதிரி பேசிவிட்டார் என சில பேட்டிகளில் அந்தப் பிரச்னை குறித்து தெரிவித்திருந்தார்.

Vijay and Napoleon s fallout during Pokkiri shooting Journalist Bismi reveals shocking details
Photo Credit:

பிஸ்மி பேட்டி: இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி இந்தப் பிரச்னை குறித்து ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார். தனியார் யூடியூப் சேனலில் அளித்த பேட்டியில், "போக்கிரி படத்தில் நடித்தபோது இரவு 2 மணிக்குத்தான் அந்த சம்பவம் நடந்தது. நெப்போலியனின் நண்பர் ஒருவர் அந்தப் பட ஷூட்டிங்கிற்கு சென்றார். அவர் விஜய்யை பார்க்க விருப்பப்பட்டார். அந்த சமயத்தி தனக்கான காட்சியை முடித்துவிட்டு கேரவனுக்குள் இருந்தார் விஜய். உதவியாளர்கள் வெளியே நின்றுகொண்டிருந்தார்கள்.

உடை மாற்றிக்கொண்டிருந்த விஜய்?: நண்பரை அழைத்துக்கொண்டு விஜய்யின் கேரவனை திறக்க நெப்போலியன் முற்பட்டார். அப்போது அந்த உதவியாளர், 'விஜய் சாரே உடை மாற்றிக்கொண்டு வெளிஎயெ வருவார். அதுவரை திறக்காதீர்கள். காத்திருங்கள்' என்று சொல்லியிருக்கிறார். இதனால் கோபப்பட்ட நெப்போலியன் அவரை ஒருமையில் திட்ட; சத்தம் கேட்டு விஜய் வெளியே வந்து பார்த்தார். என்ன ஏதென்று விசாரித்த விஜய்; 'உங்கள் உதவியாளர் என்னை உள்ளே விடமாட்டேன் என்கிறார் என சொல்லியிருக்கிறார். உதவியாளரும் நடந்ததை சொல்லியிருக்கிறார்.

கோபப்பட்ட விஜய்: உடனே விஜய்யோ நெப்போலியனிடம், நீங்கள் எப்படி அவரி திட்டலாம். நான் சொல்லித்தான் இந்த வேலையை செய்கிறார். எதுவாக இருந்தாலும் என்னிடம்தானே சொல்லியிருக்கவேண்டும். அவரை ஏன் திட்டினீர்கள் என கோபத்தோடு கேட்டார். அதனை அங்கே இருந்த அனைவரும் பார்த்திருக்கிறார்கள். இத்தனை பேர் முன்பு விஜய் இப்படி பேசிவிட்டாரே என்று நினைத்த நெப்போலியன் அப்போதிருந்து அவருடன் நடிப்பதை நிறுத்திவிட்டார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X