»   »  வேதாளத்தில் 'தல' கெட்டப்பு சூப்பரப்பு: பாராட்டிய விஜய்

வேதாளத்தில் 'தல' கெட்டப்பு சூப்பரப்பு: பாராட்டிய விஜய்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வேதாளம் பட டீஸரை பார்த்த இளைய தளபதி விஜய் அஜீத்தின் கெட்டப்பை பாராட்டியுள்ளார்.

கோலிவுட்டின் முன்னணி நடிகர்களான அஜீத்தும், விஜய்யும் நல்ல நண்பர்கள் ஆவர். அவர்கள் ஒருவரின் படத்தை மற்றொருவர் பாராட்டி வருகின்றனர். அவர்கள் நட்பு பாராட்டினாலும் அவர்களின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது மோதிக் கொள்கிறார்கள்.

Vedhalam Ajith

இந்நிலையில் தான் இளைய தளபதி விஜய் அஜீத் நடித்துள்ள வேதாளம் படத்தின் டீஸரை பார்த்துள்ளார். டீஸர் அவருக்கு மிகவும் பிடித்துவிட்டதாம். அஜீத்தின் கெட்டப்பை பாராட்டியுள்ளார் விஜய். விஜய் படப்பிடிப்பு தளத்தில் தான் வேதாளம் டீஸரை பார்த்துவிட்டு அஜீத்தை புகழ்ந்துள்ளார்.

விஜய் அஜீத்தை பாராட்டுவதும், அஜீத் விஜய்யை பாராட்டுவதும் வழக்கமான ஒன்று தான் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் தற்போது அட்லீயின் இயக்கத்தில் காக்கி படத்தில் நடித்து வருகிறார்.

விஜய்யின் புலி படத்தில் நடித்து முடித்த கையோடு ஸ்ருதி வேதாளம் படத்தில் நடித்துள்ளார். சிவா இயக்கத்தில் மீண்டும் நடிக்க விரும்புவதாக ஸ்ருதி தெரிவித்துள்ளார்.

English summary
Actor Vijay has appreciated Ajith's new look in his upcoming movie Vedhalam.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos