»   »  மீண்டும் சேரும் 'தெறி' கூட்டணி: ஆனால்...

மீண்டும் சேரும் 'தெறி' கூட்டணி: ஆனால்...

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தெறி படத்தை அடுத்து விஜய், அட்லீ மீண்டும் கூட்டணி சேர்வது உறுதியாகிவிட்டது.

விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் பைரவா படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து அவர் அட்லீ இயக்கத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் செல்வராகவனிடமும் கதை கேட்டுள்ளார். செல்வாவின் கதை விஜய்க்கு மிகவும் பிடித்துவிட்டதாம்.

Vijay, Atlee to work together again

விஜய் அட்லீ, செல்வா ஆகிய இருவரின் இயக்கத்திலும் நடிப்பது உறுதியாகிவிட்டது. ஆனால் பைரவாவை அடுத்து யார் இயக்கத்தில் முதலில் நடிக்க உள்ளார் என்பது மட்டுமே இன்னும் முடிவாகவில்லை.

இந்நிலையில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் புதிய படத்தை அட்லீ இயக்க விஜய் நடிக்கிறாராம். ஆனால் இது விஜய்யின் 61வது படமா அல்லது 62வது படமா என்பது தான் தெரியவில்லை.

முன்னதாக ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸின் 100வது படமான சங்கமித்ராவில் நடிக்க விஜய்யிடம் கேட்டதற்கு அவர் மறுத்துவிட்டார். மெகா பட்ஜெட்டில் உருவாகும் சங்கமித்ராவை சுந்தர் சி இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Vijay and Atlee are going to work together again for sure. Sree Thenandal films will produce this movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil