»   »  தெறி வெற்றியை கேக் வெட்டிக் கொண்டாடிய விஜய்!

தெறி வெற்றியை கேக் வெட்டிக் கொண்டாடிய விஜய்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நட்சத்திரக் கிரிக்கெட் போட்டிக்கு விஜய் வருவாரா... என்று பலரும் கேட்டுக் கொண்டிருக்க, அன்று வீட்டிலேயே இருந்தும் அவர் வரவில்லை.

ஆனால் அன்று நடந்த தெறி வெற்றி விழா விருந்தில் பங்கேற்று கேக் வெட்டிக் கொண்டாடிய தகவல் படங்களுடன் இன்று வெளியானதில் நடிகர் சங்கம் கடும் அதிருப்தியில் இருக்கிறது.


இந்த வெற்றி விழா விருந்து நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமையன்றே சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடந்தது.


கேக் வெட்டி

கேக் வெட்டி

இயக்குநர் அட்லி, ஹீரோ விஜய், பேபி நைனிகா, அவரது அம்மா நடிகை மீனா, இயக்குநர் மகேந்திரன், மொட்டை ராஜேந்திரன் உள்பட பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கேக் வெட்டி இயக்குநர் அட்லிக்கு ஊட்டினார். அட்லியும் விஜய்க்கு கேக் ஊட்டினார்.


வரவேற்பு

வரவேற்பு

தெறி படம் உலகம் செங்கல்பட்டு ஏரியாவைத் தவிர பிற இடங்களில் வெளியானது. படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முதல் வாரம்

முதல் வாரம்

தமிழகத்தில் முதல் நான்கு நாட்களில் இந்தப் படம் ரூ 30 கோடி வரை வசூலித்திருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் வெளியாகியுள்ளன.


நாளை

நாளை

இங்கிலாந்தில் முதல் வார முடிவில் எந்திரன் பட கலெக்ஷனை விட தெறி அதிகம் வசூலித்திருப்பதாக விஜய் தரப்பில் கூறுகிறார்கள். அதிகாரப்பூர்வ வசூல் விவரங்கள் நாளை வெளியிடப்படும் என கலைப்புலி தாணு கூறியுள்ளார்.


English summary
Vijay and Attlee have celebrated the success of Theri in a star hotel with the movie crew.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil