»   »  குட்டீஸ்களின் ஃபேவரைட் ஹீரோ விஜய்.. இளம் நெஞ்சங்களை இளைய தளபதி கவர்ந்தது எப்படி தெரியுமா?

குட்டீஸ்களின் ஃபேவரைட் ஹீரோ விஜய்.. இளம் நெஞ்சங்களை இளைய தளபதி கவர்ந்தது எப்படி தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வசூல் நாயகன், இளம் பெண்களின் கனவு கண்ணன் என்று பல்வேறு சிறப்புகள் இருந்தாலும், இளைய தளபதி விஜய் சிறு குழந்தைகளை ஈர்த்துள்ளார் என்பது அவரது வெற்றிக்கு முக்கிய காரணம்.

எந்த நடிகரை சிறு குழந்தைகளுக்கு பிடிக்கிறதோ அந்த நடிகருக்கு எப்போதுமே ஏறுமுகம்தான். அந்த நடிகர் தோற்றதாக வரலாறு கிடையாது.

பிளாக் அன்டு ஓயிட் காலத்தில் எம்.ஜி.ஆர் அப்படித்தான் கோலோச்சினார். மது குடிக்காமல், புகைக்காமல் யாருக்கும் பணியாத கதாப்பாத்திரத்தில்தான் எம்.ஜி.ஆர் நடிப்பார். அதுதான் குழந்தைகளுக்கு பிடிக்கும்.

ரஜினி வசீகரம்

ரஜினி வசீகரம்

இப்போதைய வாழும் உதாரணம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும், குழந்தைகளின் ஃபேவரைட்தான். இன்று எந்த நடிகருக்கு ரசிகராக இருந்தாலும் குழந்தை பருவத்தில் பெரும்பாலானோர் ரஜினி ரசிகர்கள்தான்.

காப்பாற்றுவாருங்க

காப்பாற்றுவாருங்க

ரஜினியின் சண்டை காட்சிகள், ஸ்டைல் போன்றவை குழந்தைகள் ஈர்த்தன. ஒரு சூப்பர்மேனை போல ரஜினியை பார்த்தனர் குழந்தைகள். எப்படியும் வில்லன்களிடமிருந்து காப்பாற்ற வந்துவிடுவார் என்ற நம்பிக்கை ரஜினியை குழந்தைகளின் ஃபேவரைட் ஆக்கியது.

இப்போ விஜய்

இப்போ விஜய்

எம்.ஜி.ஆர், ரஜினி போன்றோர் இத்தனை புகழ் பெற காரணம், அவர்கள் குழந்தைகளையும் ஈர்த்தனர் என்பதுதான். சம காலத்து இளம் நடிகர்களில் குழந்தைகளை ஈர்க்க கூடிய விரல் விட்டு எண்ணக்கூடிய நடிகர்களில் முன்னிலையில் இருப்பவர் விஜய்.

குழந்தைகளுடன் கொஞ்சல்

குழந்தைகளுடன் கொஞ்சல்

எம்.ஜி.ஆர்., ரஜினி திரைப்படங்களில் ஒரு முக்கிய அம்சத்தை பார்த்திருப்பீர்கள். குழந்தைகளுடன் அவர்களுக்கு பாடல் காட்சிகள் வைத்திருப்பார்கள். குழந்தைகளுடன் கொஞ்சலாக பேசும் காட்சிகள் இடம் பெற்றிருக்கும். அதே ஃபார்முலா விஜய் திரைப்படங்களிலும் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது.

தெறிக்க விட்ட தெறி

தெறிக்க விட்ட தெறி

தெறி திரைப்படம் அதற்கு சமீபத்திய சரியான உதாரணம். குழந்தையை மையம் கொண்டே தெறி திரைப்படம் சுழன்றது. விஜய் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் அதிகம் வசூலித்த படம் என்ற பெருமையை தெறி பெற்றுவிட்டதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

கவர்ந்த டான்ஸ்

கவர்ந்த டான்ஸ்

ரஜினியை பிடித்துப்போக ஸ்டைலும், சண்டை காட்சிகளும் காரணம் என்றால், விஜயை குழந்தைகளுக்கு பிடிக்க அவரது அபார டான்ஸ் முக்கிய காரணம். அவரது பாடல் காட்சிகளில் வரும் டான்ஸ் ஸ்டெப்புகளை குழந்தைகள் பயன்படுத்தி ஆட முயற்சி செய்வதை ஒவ்வொரு இல்லங்களிலும் பார்க்க முடியும்.

ஆட்டம் போடும் பாட்டு

ஆட்டம் போடும் பாட்டு

துப்பாக்கி திரைப்படத்தில் வரும் "கூகுள் கூகுள் பண்ணி பார்த்தேன்..", கத்தி திரைப்படத்தில் வரும், "செல்ஃபி புள்ள.. உம்மா.. உம்மா..", பாடல்களையும் முணுமுணுக்காத குழந்தைகளே இருக்க முடியாது. தெறி படத்தில் குழந்தையுடனான பாடல் காட்சியும் குழந்தைகளை வெகுவாக ஈர்த்துள்ளது. செல்போன்களிலும், பென்டிரைவிலும், திரும்ப திரும்ப போட்டு பார்த்துக்கொண்டுள்ளனர் குழந்தைகள்.

முதல் தாய்மாமா

முதல் தாய்மாமா

குழந்தைகளுக்கு எத்தனை தாய் மாமன்கள் இருந்தாலும், அவர்களின் மூத்த தாய் மாமன் அந்தஸ்து விஜய்க்குதான். டிவி திரையில் விஜய் தோன்றியதுமே, "விஜய் மாமா.." "விஜய் அங்கிள்" என குழந்தைகள் அழைக்கும் அழகே தனி.

சாப்பிட விஜய் பாட்டு

சாப்பிட விஜய் பாட்டு

கைக்குழந்தைகளுக்கு சோறூட்ட முடியாமல் கஷ்டப்படும் தாய்மார்களின் ஆசீர்வாதம் தினமும் மூன்றுவேளையாவது விஜய்க்கு உண்டு. காரணம், விஜய் பாடலை பார்த்தால்தான் பல வீடுகளில் குழந்தைகள் அடம் பிடிக்காமல் சாப்பிடுகிறார்கள்.

தானாக அமைந்தது

தானாக அமைந்தது

குழந்தைகளுக்கு பிடித்தமான ஹீரோவாக வேண்டுமானால் அது எல்லோராலும் முடியாது. குறும்பு சேட்டை, குழந்தை முகம் உள்ள நடிகர்களுக்கே அது சாத்தியம். இயல்பாகவே விஜய்க்கு அது கூடி வந்துள்ளது. இளைய தளபதி, என்றுமே இளம் நெஞ்சுகளுக்கும் தளபதி என்றால் அது உண்மையே.

English summary
Vijay is one of the favorite Tamil film hero for the children, which is the main rason for his continues succes.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil