»   »  வெள்ளை வேஷ்டி சட்டையில் இளையதளபதி விஜய் லுக் எப்பூடி?

வெள்ளை வேஷ்டி சட்டையில் இளையதளபதி விஜய் லுக் எப்பூடி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

புலி படத்தில் வெள்ளை வேஷ்டி சட்டையில் சும்மா அசத்தலாக போஸ் கொடுத்து அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார் விஜய். இதனை சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

புலி படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம் அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்த பிறந்தநாளில் பர்ஸ்ட் லுக் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.


சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'புலி'. பிரம்மாண்டமாக தயாராகிவரும் இப்படத்தில் ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், சுதீப் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து வரும் இப்படத்துக்கு நட்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். பி.டி.செல்வகுமார் மற்றும் தமீன் பிலிம்ஸ் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.


விறுவிறுப்பான படப்பிடிப்பு

விறுவிறுப்பான படப்பிடிப்பு

புலி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை ஈ.சி.ஆர் சாலையில் நடைபெற்றது. கேரளாவில் மலைப்பகுதியிலும் தற்போது ஆந்திராவின் தலைக்கோணம் பகுதியிலும் புலி படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 29ஆம் தேதியுடன் படப்பிடிப்பு முடிவடையும் என்று கூறப்படுகிறது.


ரசிகர்கள் உற்சாகம்

ரசிகர்கள் உற்சாகம்

விஜய் படம் 90 பட்ஜெட்டில் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இந்தப்படத்தின் ஒரு பாடலுக்காக 5 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட செட் போட்டு படமாக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.


வேஷ்டி சட்டையில்

வேஷ்டி சட்டையில்

இதேபோல இந்த படத்தில் விஜய் வெள்ளை வேஷ்டி, சட்டையில் அசத்தலாக போஸ் கொடுத்துள்ள படங்கள் வெளியாகியுள்ளன.


இதனை ட்விட்டர், ஃபேஸ்புக் என சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
பிரம்மாண்ட படம்

பிரம்மாண்ட படம்

விஜய் நடித்த படங்களிலேயே புலி பிரம்மாண்ட படமாக தயாராகி வருகிறது. சரித்திர காட்சிகளும் இடம்பெற்றிருப்பதால் விஜய் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி இப்படத்தினை ரிலீஸ் செய்ய முடியாது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஆகஸ்ட் 15

ஆகஸ்ட் 15

அதேநேரத்தில் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று புலி படம் ரிலீஸ் ஆகும் என்றும் படத்தின் பர்ஸ்ட் லுக் விஜய் பிறந்தநாளன்று வெளியாக வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.


English summary
The official Facebook fan page of Vijay has released a look of the actor in his forthcoming Tamil movie "Puli". The Ilayathalapathy is seen wearing a traditional vesthi with shirt in the photo. The actor looks simple yet leaves a positive impression. However, the picture does not give away any hint about the role Vijay is playing in the film.
Please Wait while comments are loading...