»   »  அஜீத், தனுஷைத் தொடர்ந்து ரஜினி படத்தை ரீமேக் செய்யும் விஜய்?

அஜீத், தனுஷைத் தொடர்ந்து ரஜினி படத்தை ரீமேக் செய்யும் விஜய்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினியின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படங்களில் ஒன்றான மன்னன் திரைப்படத்தில் நடிகர் விஜய் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ரஜினியின் படங்களை ரீமேக் செய்வது மற்றும் படங்களுக்கு அவரின் தலைப்புகளை வைப்பது ஆகியவை தமிழ்த் திரையுலகில் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன.

ரஜினியின் மிகப்பெரிய ஹிட் படமான பில்லாவை 8 வருடங்களுக்கு முன் இயக்குநர் விஷ்ணுவர்த்தன் ரீமேக் செய்ய அஜீத் நடித்து இருந்தார்.

Vijay in Mannan Remake?

அஜீத்தின் நடிப்பில் வெளியான பில்லா வெற்றிப் படமாக மாறியதுடன் வசூலையும் குவித்தது. அதற்குப் பின்னர் ரஜினி படங்களை ரீமேக் செய்த அனைவரும் அதில் தோல்வியே கண்டனர்.

இந்நிலையில் மன்னன் படத்தை கே.எஸ்.ரவிக்குமார் ரீமேக் செய்ய அதில் விஜய் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அநேகமாக விஜய்யின் 60 வது படம் தொடங்கிய ஒரு சில மாதங்களில் இந்தப் படத்தை தொடங்கலாம் என்று கூறுகின்றனர்.

மன்னன் திரைப்படமும், ரஜினியின் வேடமும் விஜய்க்கு மிகவும் பொருந்தும் என்பதே பெரும்பான்மையான ரசிகர்களின் எண்ணமாக உள்ளது.

விரைவில் இப்படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Sources Said After Bharathan Vijay next Team Up With K.S.Ravikumar for Official Remake of Rajinikanth's Mannan Movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil