»   »  அட்லீ படத்தில் அப்பாவாக விஜய்

அட்லீ படத்தில் அப்பாவாக விஜய்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் புலி படத்தைத் தொடர்ந்து ராஜா ராணி படப்புகழ் அட்லீயின் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

இரண்டு வேடங்களில் இப்படத்தில் நடிக்கவிருக்கும் விஜய் ஒரு வேடத்தில் போலீசாக நடிப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் இன்னொரு வேடம் ரகசியமாக வைக்கப் பட்டு இருந்தது. தற்போது அந்த இன்னொரு வேடத்தைப் பற்றியும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Vijay plays a dad in Atlee’s film?

முதல் முறையாக இந்தப் படத்தில் அப்பா வேடத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய். ஒரு படம் முழுவதும் அப்பாவாக விஜய் நடிக்கவிருப்பது இதுவே முதல் முறை. கத்தி படத்தில் இரட்டை வேடத்தில் நடித்த விஜய் தற்போது இந்தப் படத்திலும் இரண்டாவது முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கவிருக்கிறார். போக்கிரி, ஜில்லா படங்களைத் தொடர்ந்து இந்தப் படத்தில் மூன்றாவது முறையாக காக்கிச்சட்டை அணியவிருக்கிறார்.

புலி படத்தின் டப்பிங் வேளைகளில் பிசியாக இருக்கும் விஜய் அதனை முடித்துக் கொடுத்துவிட்டு இந்தப் படத்தில் நடிக்கவிருக்கிறார். படப் பிடிப்பை ஜூன் மாதம் தொடங்க இருக்கிறார் இயக்குனர் அட்லீ. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தை பிரம்மாண்டமாகத் தயாரிக்கப் போவது கலைப்புலி எஸ்.தாணு.

பாசமான அப்பாவா வர்றாரா இல்ல பயங்கரமான அப்பாவா வரப்போறாரா...!

English summary
Even as Vijay’s next with Atlee is yet to commence, the movie is already making news. Reports say that Vijay will be seen in khaki once more, with both Samantha and Amy Jackson playing his love interests. But here’s another googly coming the actor is apparently set to play a father in the film, which has a working title Vijay 59!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil